புலிகளிடமிருந்து பெருமளவு ஆயுதம் மீட்கப்பட்டதால்... 200 மில். டொலர் கனரக ஆயுத ரவை கொள்வனவு நிறுத்தம்
புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பயன்படுத்தவென சீனாவிடமிருந்து தருவிக்கப்பட விருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுத ரவைகள் நிறுத்தப்பட்டதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பதவி யேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த காலத்திற்குள் முடிவுற்றமையினாலும், புலிகளிடமிரு ந்து பெருந்தொகையான கனரக ஆயுதங்கள், குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டமையிலுமே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு இராணுவத் தலைமையகத்தி லுள்ள கூட்டுப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட் டில் ஜெனரல் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான ரவைகள் பாவிக்கப்பட்டன. அதே சமயம் நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்த பிரதேசங்களை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்வேறு யுத்த உபகரணங்களை மீட் டெடுத்தனர்.
மீட்டெடுக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களில் சில அந்த சமயமே யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன.
எஞ்சியுள்ள ஆயுதங்களையும், உபகரண ங்களையும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதுடன் மேலதிக களஞ்சியமாகவும் வைக்கவுள்ளோம்.
ஜெனரல் பொன்சேகா கடமைகளை பொறுப்பேற்க முன்னர் முப்படைகளினால் வழங்கப்பட்ட மரியாதை அணி வகுப்புக் களையும் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரி, விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment