எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்ட விடுதலைப் புலிகள்
எதிர்த்தரப்பினர் கையாண்ட தந்திரோபாயங்கள் மற்றும் அவர்களிடம் ஏற்பட்ட மாறுதல்களை விடுதலைப் புலிகள் அமைப்பு அறிந்துகொள்ளாமையே அவர்களுக்குப் பின்னடைவு ஏற்படக் காரணமாகவிருந்தது என இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்ட் அமைப்பு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் எதிரிகளைக் குறைத்து மதிப்பிட்டதுடன், தமது பலம்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள 16 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் ஏற்பட்ட அனுபவம் எமக்கு மிகவும் முக்கியமானது. அதிலிருந்து நல்லதொரு படிப்பினையைப் பெற்றுள்ளோம். விடுதலைப் புலிகள் எதிரியின் உத்திகள், பலம், சர்வதேச ஆதரவு, சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவு போன்றவற்றை அறிந்துகொள்ளாததுடன், எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மேற்குவங்கப் பகுதியிலுள்ள கிராமமொன்றைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த புரட்சிக் குழுவான மாவோயிஸ்ட் அமைப்பு, அங்கு ஆட்சியமைத்திருந்த கொமியூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கி சேதப்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை இந்திய மத்திய அரசாங்கம் தடைசெய்திருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment