புலிகளின் நிஜ அரசு சாதிக்காததை, நிழல் அரசு சாதிக்குமா? நிதானமான அரசியல் தலைமையே இன்றைய தேவை-கனடா வீரமக்கள் தினத்தில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரி!
தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்திருந்த தலைவர்களான அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன், பத்மநாபா, ஸ்ரீசபாரத்தினம் முதல் அண்மையில் கொல்லப்பட்ட புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வரையில் அனைவரும் ஒரு காலகட்டத்தில் பட்டிணி கிடந்து அரசியல் இயக்கத்தையும் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர். த.வி.கூ தலைவர் அமிர்தலிங்கமும் அதில் பங்கு கொண்டவர்; தனது உதவிகளை இவ் இயக்க தலைவர்களுக்கும் வழங்கியவர். ஆனால் இந்த போராட்டத்தில் தமிழ் அரசியல் தலைமை நம்மவர்களாலேயே முற்றாக அழிக்கப்பட்டது என்பதே துரதிஷ்ட்டமான உண்மை. இதன்பாரிய பொறுப்பு புலிகள் இயக்கத்தையே சாரும்.
தன்னை தானே அழித்த இனமாக தமிழினம் இன்று உலக அரங்கில் நிற்கின்றது. ஏனைய தமிழ் அமைப்புகளையும் இணைந்து வேலை செய்ய அழைப்புவிடுத்துள்ள புலிகளின் கே.பத்மநாதன்(கே.பி) இன் அறிவிப்பானது காலம் கடந்த ஞானம் எண்றாலும் வரவேற்க கூடியதே. இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் எத்தனையோ மறைந்த தமிழ் தலைவர்கள், போராளிகளையும், போராட்டத்தையும் காப்பாற்றியிருக்கலாம். போதிய ஆயுதம் இருந்தும் போராட ஆட்பலம் இன்றி, புலிகள் இராணுவத்திடம் தோல்வி கண்டனர். எங்கேயோ சென்றிருக்க வேண்டிய எமது போராட்டம், 30 ஆண்டுகளுக்கு மேல் பின்னோக்கி நகர்த்தப்பட்டுவிட்டது.
இன்று புலிகள் கூறும் நிழல் அரசு புலம்பெயர் நாடுகளில் சிலர் தமது இருப்பை தக்கவைக்கவும், சுய விளம்பரத்துக்குமாக போடுகின்ற வெற்றுநாடகம் என்றும் குற்றம்சாட்டி, கனடா வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றிய ஜெயசங்கரி தமிழ்மக்கள் இன்று வேண்டுவது நிதானமான அரசியல் தலைமையே என்றும் குறிப்பிட்டதுடன், தமிழ்மக்களும் இதனை எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவித்திருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment