மைக்கேல் ஜாக்சன் சாவுக்கு டாக்டரே காரணம்’ தந்தை குற்றச்சாட்டு .
உலக புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் மைக்கேல்ஜாக்சனின் சாவுக்கு அவரது டாக்டரே காரணம் என தந்தை ஜோ ஜாக்சன் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு தனியார் டெலிவிஷனுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கான்ராடு முர்ரே என்பவர் மைக்கேல் ஜாக்சனின் டாக்டராக இருந்தார். இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் மைக்கேல் ஜாக்சனுக்கு ஏதோ ஒன்றை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் எழுந்திருக்கவேயில்லை. அதுவே அவரை மீளா ஓய்வில் (சாவு) ஆழ்த்தி விட்டது.அவர் கொடுத்த மருந்து மாத்திரையில்தான் தவறு நடந்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் இறந்தவுடன் டாக்டர் எங்கோ ஓடி தலைமறைவாகிவிட்டார். 3 நாட்களுக்கு பிறகுதான் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். ஜாக்சனின் சாவு குறித்து டாக்டர் முர்ரேயிடம் அதன் பிறகுதான் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எனது மகனின் சாவு என்னை மிகவும் துன்பப்படுத்துகிறது.எனது மகனின் உடல் எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதே எனக்கு தெரியாது. குடும்பத்தினர் கேட்டுக் கொண்ட பிறகு 2-வது முறையாக பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை தரப்பட்டது.இவ்வாறு ஜோ ஜாக்சன் தெரிவித்தார்.ஆனால் மைக்கேல் ஜாக்சனின் சாவில் சந்தேகமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இருதய நிபுணர்தான் முக்கிய சாட்சி. அவர்தான் மைக்கேல்ஜாக்சன் இருந்த மேன்சனில் தங்கி இருந்து அவரை மீண்டும் உயிர் பெற செய்ய சிகிச்சை அளித்தார்.அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது காரில் மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட சில ஆதாரங்கள் கிடைக்கலாம் என்பதற்காக கார் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment