தமிழீழம் தமிழீழம்என்று…. கர்வம்தனை தலையில் சுமந்து….பொய்களை உரைத்த சுயநலவாதிகள் எங்கே? அவர்கள் இங்கே
தலைக்கனத்தை
தலைப்பாகைபோல்
தலையில் சுமந்து
தமிழீழம் கேட்டு
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
தவித்திடும் மக்களை
தலைவிரிகோலமாய்
தரணியில் தவழவைத்து
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
தாகம் கொண்ட மக்களுக்கு
தண்ணீர் கொடுக்காது
திரவம் கலந்து கொடுத்து
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
தடம்புரண்ட வழிப்போக்கர்களை
தடவிகொடுக்காமல்
தன்னலமாய் பார்த்து
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
தார்மீக கடமையென்று
தத்துவம் பேசி (நீச்சல்)
தடாகம்தனில்
தலைவனை நீராடவைத்து
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
தனக்குவியல்களை
தானமாகப்பெற்று
தமிழீழம் தருவோம்மென்று
தட்டு ஏந்தி சென்று
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
தங்கங்களை தரைக்கு
தாரைவார்த்து
தகடுகள் போல் நடமாடிய
தரம்கெட்ட ஜீவிகளுக்கு கை
தட்டி மகிழ்ந்து
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
தள்ளாத வயதினிலும்
தாய்மண்ணை நேசித்த
தாத்தாவின் நெஞ்சில் உதைத்த
தற்பெருமை வாதிகளை நேசித்து
தனித்துவம் பேசிய
தமிழர்கள் எங்கே
மீண்டும் வாக்கு வேட்டையில்
பெருமாள் கோவிலுக்கு நேர்கடன்விட்ட
மந்தைகள்போல் மக்கள் மத்தியில்
வலம் வரும் துரோகிகளே
கிளியின் கிராமத்து நாயகன்
வவீதரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment