புகைப்படங்களை வைத்து பொய்ப்பிரச்சாரத்தில் புலி ஆதரவு இணையத்தளங்கள்
கடந்த 2009.07.11 ஆம் திகதி சனிக்கிழமை மெனிக்பாம் அகதி முகாமுக்கு இளையோர்களின் செயற்திட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுக்கச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ அங்குள்ள மக்களினால் சேறடிப்புக்கு உள்ளானதாக கடந்தவாரம் புலிகளின் இணையத்தளங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன.
;இது தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக லங்கா நியுஸ்வெப் இணையத்தளம் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டதாகவும் அதற்காக எல்லகடந்த ஊடகவியலாளர் அமைப்பும் கண்டனம் தெரிவித்த செய்திகளும் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
"இளைஞர்களுக்கு நாளை" அமைப்பின் தலைவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ தாக்கப்பட்ட செய்தி பொய்யானதாகும். அவர் வன்னி மக்களைச் சந்திக்க செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால் அது பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளிவந்திருக்கும். புலிகளின் இணையத்தளங்கள் புகைப்படங்களை வைத்து மக்களிடையே பொய்ப்பரப்புரைகளை மேற்கொள்வது வழக்கமானதாகும். இம்முறை தமிழ்மக்களை ஏமாற்ற மீண்டும் செய்யப்பட்ட பரப்பரை மோசடி இதுவாகும்.
நாமல் ராஜபக்ஸாவின் மகனின் பெயரில் இணையத்தளம் ஒன்று உள்ளது. http://www.namalrajapaksa.com/gallery அங்கு ஒரு அவரது புகைப்படங்கள் நிறைய உள்ளன. 22.01.2007 அன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்ஷாவின் மகன் பங்குபற்றியிருந்த படம் ஒன்றை (அதில் புகைப்படம் எடுக்கப்பட்ட திகதியுமுள்ளது) எடுத்து புலிகளின் இணையத்தளங்கள் ராஜபக்ஷாவின் மகன் மீது முகாமிலிருந்த மக்கள் கல்வீசி சேறடித்ததாக பொய்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளன.
கடந்தகாலங்களில் இது போன்ற பல புகைப்பட மோசடிகளை செய்து வந்துள்ள புலிகளின் இணையத்தளங்கள் தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கின்ற வழிமுறைகள் மிக மோசமானவையாகும்.
புலிகளின் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி செய்தியைப்பாருங்கள்
Tamilwin
மெனிக்பாம் அகதி முகாமுக்கு பயணம் செய்த ஜனாதிபதியின் மூத்தமகன் மீது சேறடிப்பு மற்றும் கல்வீச்சு தாக்குதல்
வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாமுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.
தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்ஷாவின் இணையத்தளத்தில் இருந்த புகைப்படங்கள்
0 விமர்சனங்கள்:
Post a Comment