இடம்பெயர்ந்தவர்களுக்கு உல்லாச விடுதி சமையல் காரர்களின் உணவு
ஐந்து நட்சத்திர விடுதியின் சமையல் கார்கள் குழுவொன்று வவுனியாவில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு உணவுகள் சமைத்து வழங்கிவருகிறது.
கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளான கோல்பேஸ் விடுதி, சினமன்ட் கிரான்ட், ஹொலிடே இன், ரான்ஸ் ஏசியா, தாஜ் சமுத்திரா, கொண்டினென்டல், மவுன்லவேனியா விடுதி ஆகியவற்றைச் சேர்ந்த சமையல்கார்கள் குழுவொன்றே இவ்வாறான சேவையொன்றை வழங்கிவருகிறது.
இந்த உல்லாச விடுதிகளைச் சேர்ந்த சமையல் காரர்கள் குழுவொன்று கடந்த ஜுன் மாதம் முதல் ஒவ்வொரு கிழமையும் சுழற்சிமுறையில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு உணவுகளைச் சமைத்து வழங்கி வருகின்றனர். அரசசார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டிலேயே இந்தச் சேவை வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பல்வேறு மனிதநேய அமைப்புக்கள் ஐ.நா. முகவர் நிலையங்களுடன் இணைந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான உணவுப் பொருள்களையும், சமைத்த உணவுகளையும் வழங்கிவருகின்றன.
இதற்கென ஆறு சமையலறைகள் உருவாக்கப்பட்டு, 10,000 பேருக்கு உணவு சமைத்து வழங்கப்படுவதாகவும், இதற்கென ஒவ்வொரு உல்லாச விடுதிகளும் சுழற்சிமுறையில் தமது பணியாளர்களை அனுப்பிவைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய மூன்று வேளை உணவு இவர்களால் சமைத்து வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது 30 ரூபா முதல் 70 ரூபாவரை செலவவாதாகவும் அரசசார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment