இலங்கை தமிழரின் இரு குழந்தைகள் ஆஸியில் மர்மமான முறையில் மரணம்
அவுஸ்தி ரேலியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் இளம் குழந்தைகள் இருவர் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்ட பரபரப்பான சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். பிறந்து 7 மாதங்களே ஆன இந்த பச்சிளம் பாலகர்களின் தந்தை செல்வின் அரியரத்தினம் திங்கட்கிழமை மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது அவரது குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் சடலமாக கிடக்கக் கண்டு அதிர்ச்சியுற்றார். குழந்தைகளின் தாயாரான றீட்டா மருந்து உட்கொண்ட மயக்கத்தில் நிலத்தில் நினைவிழந்து கிடக்கக் காணப்பட்டார்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அந்த அழகான நவீனமுறையில் அமைந்த வீடு முழுவதிலும் சல்லடை போட்டு தேடுதல் நடத்தினர் இலங்கையில் பிறந்தவரான அரியரத்தினம் உடனடியாக சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் வண்டியை வரவழைத்து அவர்களது உதவியுடன் குழந்தைகள் இருவரையும் அவசர அவசரமாக பிறின்செஸ் மார்கிறெட் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற போதிலும் தந்தையின் முயற்சி பயனளிக்காது போய்விட்டது.
குழந்தைகளின் தாயார் பிரசவத்தை அடுத்து ஏற்பட்ட அழுத்தக் குறைவு நோய் காரணமாக பல நாட்களாக கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் என்றும் நெருங்கிய உறவினர் பொலிஸாரிடம் தெரிவித்தனர். விதிவசப்பட்ட குழந்தைகளின் பெற்றாரான இளம் தம்பதியர் எதுவித பிரச்சினைகளுமின்றி திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்று இக்குடும்பத்தின் நெருங்கிய நண்பி ஒருவர் தெரிவித்தார்
ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரு குழந்தைகளுடன் திருப்திகரமாக வாழ்ந்து வரும் இக் குடும்பத்தின் இளம் தாயார் நீண்ட காலமாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் என்றும் இது தற்செயலாக ஏற்பட்ட கர்ப்ப தரிப்பு அல்ல என்றும் அந்த குடும்ப நண்பி மேலும் கூறினார். தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட திருமதி அரியரத்தினம் ஒரு அன்பான தாய் என்றும் அவருக்கு அழுத்தக் குறைவு நோய் ஏற்பட்டதும் இதற்கு சிகிச்சை பெற்றதும் அவ்வேளையில் தமக்கு தெரியாது என்றும் அந்த நண்பி கூறினார். அவருக்கு டாக்டரினால் வழங்கப்பட்ட மருந்துகள் வீட்டில் காணப்பட்டன என்று சிரேஷ்ட பொலிஸ் சார்ஜன்ட் மார்க் ஃபை தெரிவித்தார். எந்த விதமான மருந்துகள் என்று தெரிவிக்காத அவர் மருந்தை அளவுக்கதிகமாக அவர் உட்கொண்டிருப்பாரென தாம் கருதுவதாகவும் கூறினார்.
குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை தம்மால் கூற முடியாதிருக்கிறது என்று தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே உத்தியோகபூர்வமாக காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
Mum suspected in murder-suicide bid with baby twins
POLICE are investigating reports that a mother found unconscious beside her dead twins inside a Perth home was suffering depression.
Detective Senior Sergeant Mark Fyfe said drugs prescribed to Rita Ariyaratnam were found beside her unconscious body and those of her dead seven-month-old twins, Sophie and Lachlan.
Police believe Mrs Ariyaratnam may have killed her son and daughter before attempting to take her own life.
Det Sen Sgt Fyfe said family members had told police the mother had been suffering postnatal depression and been prescribed drugs for treatment.
He said police had ruled that no one had forced entry into the house and the incident was being investigated as an apparent murder-suicide.
"We are investigating reports the mother was suffering postnatal depression," Sen-Sgt Fyfe said.
"We have been unable to confirm that at the moment.
"It appears she may have taken an overdose of prescription drugs, but until later today when the toxicology reports are out, I can't confirm that."
Police would not confirm reports the children had drowned, but said a post mortem to determine the exact cause of death would be undertaken this morning.
"It's a tragic, tragic incident which has taken its toll on the family," Sen-Sgt Fyfe said.
"All homicides are difficult and ... it's harder when it's an infant."
Major crime squad detectives were called to the home in the eastern Perth suburb of Cloverdale about 3.30pm on Monday afternoon.
They said the father, Selvin Ariyaratnam, had returned home from work to find his partner and children unconscious in the loungeroom.
Mr Ariyaratnam made a desperate call to 000 and was given instructions over the phone on how to perform resuscitation until paramedics and police arrived.
When the first ambulance arrived, its crew started resuscitating Mrs Ariyaratnam, while the second crew and police worked on the infants.
The twins, the couple's only children, were taken to Princess Margaret Hospital but they were unable to be resuscitated and were pronounced dead on arrival.
Mr Ariyaratnam was sedated and police hoped to speak to him later in the day.
The mother remained in a critical but stable condition in the intensive care unit of the Royal Perth Hospital.
Neighbours said the news came as a shock, describing the family as friendly and happy.
Aleisha Preedy
July 08, 2009
0 விமர்சனங்கள்:
Post a Comment