சூரிய கிரகணம் ஏற்படுவதால் சுனாமி உருவாகும் என்ற ஊகம் ஆதாரமற்றது
கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பமே சுனாமியை தோற்றுவிக்கும்
சூரியக் கிரகணம் நாளை மறுதினம் ஏற்படுவதனால் சுனாமி உருவாகக் கூடுமென வெளிவருகின்ற ஊகங்கள் யாவும் விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்த முடியாதவை என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பூகற்பவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்கா தெரிவித்தார். கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பமே சுனாமியைத் தோற்றுவிக்கும்.
என்றாலும் பூகம்பம் முன்கூட்டியே எதிர்வு கூறக்கூடிய ஒரு அனர்த்தமல்ல. அதற்கான விஞ்ஞான தொழில்நுட்ப அறிவியல் கருவிகளும் இற்றைவரையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே பூகம்பத்தை முன்கூட்டியே விஞ்ஞானபூர்வமாக எதிர்வு கூறமுடியாத நிலை நிலவும் போது சுனாமி ஏற்படும் என்பதையும் உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
நாளை மறுதினம் ஏற்படும் சூரிய கிரகணம் காரணமாக சுனாமி ஏற்படலாம் என்று வெளியாகியுள்ள ஊகம் தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
பூகம்பம் எங்கு? எந்த அளவில் எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை முன்கூட்டியே விஞ்ஞானபூர்வமாகக் கூறமுடியாது. இதற்கென இற்றைவரையும் தொழில்நுட்ப வசதிகளும் கூட கண்டுபிடிக்கப்படாதுள்ளன. அதனால் இந்த ஊகத்தை உறுதிப்படுத்த முடியாது.
பூகம்பம் எந்த நேரத்திலும் ஏற்படலாம். ஏற்பாடதும் விடலாம். தோற்றம் பெறும் பூகம்பம் எல்லாமே சுனாமியைத் தோற்றுவிக்கும் என்றில்லை. கடலுக்கடியில் ஏற்படும் பாரிய பூகம்பங்களே பெரும்பாலும் சுனாமியை ஏற்படுத்தக் கூடியவை என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment