பிரான்ஸின் லாச்சப்பல் என்னுமிடத்தில் புலிகளுக்கும் தமிழ்இளைஞர் குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலின் தற்போதைய நிலைமை!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை புளொட் அமைப்பின் வீரமக்கள்தின சுவரொட்டிகள் ஒட்டியமை தொடர்பில் பிரான்ஸின் தலைநகரான பாரீஸிலுள்ள லாச்சப்பல் என்னுமிடத்தில் புலிகளுக்கும் இளைஞர் குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்த தமிழ்இளைஞர் குழுவைச் சேர்ந்த அனைவரும் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மேற்படி இளைஞர்களை விடுவிக்கக் கூடாதெனவும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான வர்த்தகர்களிடம் கையெழுத்து வாங்கி சட்டத்தரணி ஒருவரின் ஊடாக பொலீசாரிடம் அறிக்கையொன்றினை சமர்ப்பித்திருந்தனர். ஆயினும் அதனைப் பொலீசார் நிராகரித்ததுடன், வர்த்தகர்கள் ஒவ்வொருவரும், தனித்தனியாக கடிதம் எழுதி கையெழுத்திட்டு தரவேண்டும் அல்லது வர்த்தகர்களின் பெயர் விபரங்களை எழுதி கையொப்பங்களை இட்டு கையளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதுடன் அதனைச் செய்யத் தவறியமையே அறிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு காரணமென சுட்டிக் காட்டியுள்ளது. அத்துடன் கோரிக்கை தனியாகவும் பெயர் விபரங்கள் கையொப்பங்கள் வௌ;வேறாக உள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்றிரவு விடுதலையாகிய தமிழ்இளைஞர் குழுவைச் சேர்ந்தவர்கள் இவ்விடயம் தொடர்பில் விபரம் தருகையில், ‘தம்மை இவ்வளவு காலமும் அடக்கியாண்ட புலிகள் தொடர்ந்தும் அவ்வாறு அடக்கியாள முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், இனிமேலும் இதுபோன்ற அடாவடித் தனங்களில் புலிகள் அமைப்பினர் ஈடுபடுவார்களாயின் நாம் தட்டிக்கேட்பதற்கு தயங்க மாட்டோமென்றும், ஆயினும் நாம் சட்டத்திற்கு கட்டுப்பட்டே நடக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் ‘மேற்படி விடயத்தில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் பலருடனும் தாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பெரும்பான்மையான வர்த்தகர்கள் புலிகள் தாங்களாகவே வந்து ஒரு வெள்ளைத் தாளில் கையெழுத்துக் கேட்டதன் காரணத்தினாலேயே தாம் கையெழுத்திட்டு கொடுத்ததாகவும், தாம் மனமுவந்து இதனைச் செய்யவில்லையென்றும்” இவ்விளைஞர் குழுக்களிடம் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான பிரபல வர்த்தகர் ஒருவரிடம் அதிரடி இணையதளம் தொடர்பு கொண்டு இவ்விடயம் பற்றிக் கேட்டபோது, அவர் தனது பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று தெரிவித்து விட்டு, ‘தாம் என்ன செய்வது, புலிகள் அமைப்பினர் வந்து இதுபோன்று கையெழுத்திடுமாறு கேட்டபோது கையெழுத்திட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ‘தம்மால் கையெழுத்திட மறுக்க முடியாத அச்சுறுத்தல் நிலையென்பதால் கையெழுத்திட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், நாம் வர்த்தகர்கள் என்பதால் எமக்கு எல்லோரும் தேவை. அதேநேரத்தில் இளைஞர்குழுக்கள் இதுபற்றி எம்மிடம் கேட்டதற்கு உள்ளதையே சொல்லியிருக்கிறோம். நாம் பொலீஸ் நிலையம் சென்றோ அல்லது நீதிமன்றம் சென்றோ இப்பிரச்சினைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்டு வெளிநாடுகளிலும் பலவழிகளிலும் புலிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்நிலையில் புலிகள் எந்த வழியிலாவது தமது அமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அக்கறை போன்றதொரு மாயையை புலம்பெயர் மக்களிடையே ஏற்படுத்தி தமது சுகபோக வாழ்க்கையினையே முதன்மையாகக் கொண்டு ஏற்கனவே சேகரிக்க பணத்தினை தமது சுயலாபத்திற்காக பயன்படுத்துவதற்காக புலி இராஜ்ஜியம் என்ற பெயரிலான மாயையை கட்டியெழுப்ப முயல்கின்றனர். இந்நிலையில் பல ஐரோப்பிய நாடுகளிலும் புலிகளின் அடாவடித்தனங்களுக்கு எதிராக இளைஞர் குழுக்கள் தற்போது கிளர்ந்தெழிவதை காணக் கூடியதாகவுள்ளது. இவ்வளவு காலமும் ஒதுங்கியிருந்த தமிழ்இளைஞர்கள் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே சுவிஸ் போன்ற நாடுகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தமிழ்இளைஞர்களின் தீவிர புலிஎதிர்ப்பு நடவடிக்கைகள் வெளிக்காட்டி வருகின்றது.
http://live.athirady.org/?p=45701
0 விமர்சனங்கள்:
Post a Comment