பிரபாகரனின் மூன்றாவது மகனை படுகொலை படத்தை முதலில் வெளியிட்ட சிங்கள இணையம் இலங்கையில் தடை
இலங்கை அரசினால் லங்கா நியூஸ் வெப் தடைசெய்யப்பட்டுள்ளது
இலங்கை அரசின் ஊடகங்கள் மீதான ஒடுக்குதலின் இன்னொரு கட்டமாக புகலிடத்ததை தளமாக கொண்டு இயங்கிய LANKA NEWS WEB. COM இனையத்தளம் இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக Lanka news web தளத்தின் செய்தி ஆசிரியர் பின்வருமாறு கூறினார்.
இலங்கை நேரப்படி 11ம் திகதி இரவு 7மணிக்கு தாங்கள் பிரபாகரனின் முண்றாவது பிள்ளை பாலச்சந்திரனின் கொலை தொடர்பான புகைப்பட ஆதாரத்தை பதிவிட்டதாகவும். அதேநாள் இரவு 8மணி அளவில் தமது இனையத்தளம் இலங்கையில் உள்ளவர்கள் பார்க்க முடியாதவாறு முடக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலங்கை அரசினால் ஊடகவியளாளர்கள் மீது தொடுக்கப்படும் வண்முறையின் தொடர்ச்சியினால் பல ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேரியுள்ள இவ்வேளையில் Lanka news web புகலிடத்தை தளமாக கொண்டு செய்தி ஊடகமாக மூண்று மொழிகளிலும் இயங்குகின்றது.
May மாதம் இத்தளத்தை நிறுத்தும் நோக்குடன் இலங்கை அரசினால் இத்தளத்தின் கோப்புகளை பாதுகாக்கும் (HOSTING) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிற்பாடு இத்தளம் நிறுத்தப்பட்டது. இருந்த போதும் முண்று நாட்களுக்குள். புதிய HOSTING மூலமாக இத்தளம் இயங்க ஆரம்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இத்தளத்ததை இலங்கையில் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தற்காலிக முகவரியின் மூலம் பார்க்க முடியும்.
http://www.bbcproxy.info
0 விமர்சனங்கள்:
Post a Comment