சிறையில் உண்ணாநிலைப்போராட்டத்தை கைவிட்டார் நளினி
வேலூர் பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்த ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினியை பெண் மருத்துவர் பரிசோதனை செய்தார். சிறை அலுவலர்களின் சமரசத்துக்குப் பிறகு தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை நளினி கைவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, தனக்கு முதல்வகுப்பு சலுகை வேண்டும் என்று வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை சிறை உணவை வாங்க மறுத்துவிட்டார்.
வழக்கமாக மாலை 6.30 மணிக்கு வழங்கப்படும் சிறை உணவை அவர் மறுத்துவிட்டு, தனது சொந்த செலவில், சிறையில் உள்ள கேண்டீனில் ரொட்டி, பால் வாங்கி சாப்பிட்டார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவியது.
எனவே சிறை அதிகாரிகள் நளினியை சமரசம் செய்தனர். முதல்வகுப்பு வசதி வழங்குவது குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை தனது போராட்டத்தை கைவிட்டு, சிறை உணவை பெற்றுக் கொண்டார் நளினி.
0 விமர்சனங்கள்:
Post a Comment