"சனல் 4" வீடியோவை வழங்கியது ஜேர்மனிலுள்ள சிங்களப் புலிகளே
இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக் களை ஜேர்மனியில் உள்ள சிங்கள விடுத லைப்புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர் என "திவயின" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினர் தமிழர்களை படு கொலை செய்வது போலச் சித்திரிக்கும்
இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக் களை ஜேர்மனியில் உள்ள சிங்கள விடுத லைப்புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர் என "திவயின" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினர் தமிழர்களை படு கொலை செய்வது போலச் சித்திரிக்கும் போலி
யான காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ஜேர்மனியில் உள்ள ஐந்து சிங்கள விடுதலைப்புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர்.
இந்த வீடியோக் காட்சிகள் முழுக்க முழுக்க போலியானவை எனவும் இராணுவத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜே.டி.எஸ். எனும் பெயருடைய அமைப்பே இவ்வாறான வீடியோக்களை விநியோகம் செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோக் காட்சிகள் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் புலிகளுக்கு சார்பான இணையத் தளங்களில் வெளியிடப்பட்டன என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment