மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பாக மாண்புமிகு “கோத்தபாய ராஜபக்ஸ” அவர்களுடன் ஒரு மினி பேட்டி..!
நிருபர்: வணக்கம் அகதிகள் முகாம் நிலவரம் எப்படி இருக்கின்றது?
ராஜபக்ஸ: முதலில் அதை அகதிகள் முகாம் என்று அழைப்பதைவிட பல ஆயிரம் மக்கள் ஒன்றாய் வாழும் ஒரு அழகிய நகரம் என்று வேண்டுமானால் கூறலாம்.
நிருபர்: மலசல கூடங்கள் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக ஒரு புகார் இருக்கின்றதே?
ராஜபக்ஸ: முதலில் மலசல கூடம் சுகாதாரமாய் இருப்பதற்க்கு அது என்ன கோயிலா? அல்லது ஓட்டலா? எது எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படியேதான் இருக்கவேண்டும்.
நிருபர்: தண்ணீர் தட்டுப்பாடு என்று இன்னுமொரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
ராஜபக்ஸ: தண்ணீர் குறைவாய் வந்தால் தட்டுப்பாடு என்பார்கள், அதிகமாய் வந்தால் வெள்ளம் என்பார்கள் அவர்களை பொறுத்தவரை ஏதாவது குறை சொல்வதே பொழுது போக்காய் கொண்டிருக்கிறார்கள்.
நிருபர்: மக்கள் எப்பொழுது முழுவதுமாய் குடியேற்றப்படுவார்கள்?
ராஜபக்ஸ: வடக்கின் வசந்தம் முடிவுக்கு வரும்போது மக்கள் முழுவதுமாய் குடியேற்றப்பட்டிருப்பார்கள்
நிருபர்: வடக்கின் வசந்தம் எப்பொழுது முடிவுக்கு வரும்?
ராஜபக்ஸ: மக்கள் மீள்குடியேற்றம் முடிவுக்கு வரும்போது வடக்கின் வசந்தமும் முடிவுக்கு வரும்.
நிருபர்: பல கட்சிகள் தங்களை முகாமுக்குள் அனுமதிப்பதில்லையென்று என்ற குற்றச்சாட்டிற்க்கு உங்கள் பதில்
ராஜபக்ஸ: முகாம் எந்த நிலையில் இருந்தாலும் இவர்கள் அங்கே போய்வந்தவுடன் முகாமுக்குள் மக்கள் எலி போல் வாழ்கிறார்கள், எறும்பு போல் வாழ்கிறார்கள் என்றுதானே சொல்லப்போகிறார்கள் அதை வெளியிலிருந்தே சொல்லிட்டு போகட்டுமே.
நிருபர்: நன்றி உங்கள் கருத்திற்க்கு வணக்கம்.
– மோகன் (இது கற்பனையான பேட்டி தான்.. ஆனால் நிஜமாகலாம்..!)
(மின்மினியின் மினி மினி பேட்டிகள்.. –வாசகர் ஆக்கம்)
0 விமர்சனங்கள்:
Post a Comment