பிறநாடுகளிலிருந்து கடத்தப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுகின்றனர்
கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலிருந்த 30 - 40 விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டமை குறித்த இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் இரகசியத் தகவலொன்று எமது இணையத்தளத்திற்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு நாடு கடத்தப்படுபவர்கள், இரகசிய விசாரணைகளின் பின்னர் சட்டவிரோதமாக கொல்லப்படுவதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் உள்ளவர்களில் இலங்கை அரசாங்கத்தின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தவர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
சர்வதேச நாடுகளின் அந்தந்த இடங்களில் உள்ள புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் இலங்கைப் புலனாய்வுப் பிரிவு இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டுள்ளமையும் இதன்மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த ஒரு நபர், தேடப்படும் நிலையில், அவர் அந்த நாடுகளில் உள்ள புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
அத்துடன், மறுகனமே இலங்கைக்கான விமானத்தில் அவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படுவர்கள், இரகசிய விசாரணைக்குட்படுத்தப்பட்டு, சட்டவிரோதமாக சுட்டுக் கொல்லப்படுவதாக அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
இவ்வாறு கடந்த காலங்களில் சர்வதேச ரீதியாக 30 முதல் 40 உறுப்பினர்கள் கடத்தப்பட்டு, இரகசிய விசாரணைகளின் பின்னர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
கே.பி. கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எமது இணையத்தளம் மேற்கொண்டுவரும் விசாரணைகளின் போதே அரசாங்கத்தின் இந்த இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றது.
Lanka News Web
0 விமர்சனங்கள்:
Post a Comment