அண்ணாச்சி என்னாச்சு
இவ்வளவு நாளும் புலிப்பாட்டு பாடிக்கொண்டிருந்த அண்ணாச்சி இப்ப
எதிர்ப்பாட்டு பாடத் தொடங்கி விட்டார். என்னடா இவ்வளவு புலி
விசுவாசியாக இருந்தவர், பொங்கு தமிழ் தொடக்கம் மாவீரர் விழா,
வீ வோன்ற் ரமில் ஈலம் வீ வோன்ற் சீஸ் பயர், அவர் லீடர் பிரபாகரன் என்
று ரொறன்ரோ, மொன்றியல், ஒட்டாவா என்று சிவப்புக் கோவணத்தோடை
அலைஞ்சவர், திடீரென்று அண்ணாச்சி புலிக்கு எதிராக் கதைக்கத் தொடங்
கியிருக்கிறார் என்று எனக்கு ஒரே ஆச்சரியம்.
என்ன அண்ணை நடந்தது. எங்கும் புலி எதிலும் புலி என்று இருந்த நீங்கள் திடீரென்று இப்படி மாறியிட்டீங்கள் என்று கேட்க அண்ணாச்சி தான் உவங்களை நம்பி ஏமாந்து
போனதாகச் சொன்னார். என்னண்ணை நடந்தது என்னண்டு ஏமாந்தனீங்கள்.
இல்லைத் தம்பி வவுனியாவிலை இருக்கிற தங்கச்சியோடை கதைச்சனான்.
முள்ளி வாய்க்காலிலை என்ரை தம்பியின்ரை குடும்பத்தைக் கொலை செய்
தது புலியளாம். நான் ஆமிக்காரன் அடிச்ச செல்லிலைதான் என்ரை தம்பி
குடும்பம் செத்தது எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். புலியள் கொலை
செய்துபோட்டு ஆமிக்காரனைச் சாட்டிப் போட்டாங்கள்.
ஏனண்ணை நீங்கள் தானே அவங்களுக்கு நல்ல சப்போட்டு, நிறைய காசெல்லாம் குடுத்தனீங்
கள். உங்கடை தம்பியை அவங்கள் கொன்றிருக்கக் கூடாதே. இல்லைத்தம்
பி புலியள் சுட்டதை ஆக்கள் கண்டிருக்கினம். அது சரி ஏன் சுட்டவங்கள்.
ஏன் முழுக்குடும்பத்தையும் சுட்டவங்கள். முள்ளி வாய்க்காலிலை இருந்து தப்
பியோடேக்கை புலியள் கண்டிட்டாங்களாம். குடும்பத்தோடை கடற்
கரையிலை விட்டுச் சுட்டுப் போட்டாங்களாம். தங்கச்சி சொன்னவள் உவங்
களைப்பற்றி எக்கச்சக்கமாச் சொன்னவள். உவங்கள் உப்பிடியான ஆக்கள்
எண்டு எனக்குத் தெரியாமல்போச்சு.
ஏனண்ணை நாங்கள் நாங்கள் சொன்னாங்கள் தானே, நம்பமாட்டனெண்டிட்
டியள். மற்றவைக்கு நடக்கேக்கை உங்களுக்கு பெரிசாத் தெரியாது. அவங்
கள் காரணமில்லாமல் செய்யமாட்டாங்களெண்டு வாதாடுவியள். அவங்கள்
தான் மக்களைக் காப்பாத்துவாங்கள் எண்டும் சொல்லுவியள். இப்படி
சொந்த இனத்தையே கொல்லுறவங்களை எப்பிடி மக்களைக் காப்பாத்துவாங்
கள் எண்டு நம்பினனீங்கள். நாங்கள் எத்தினை தரம் உங்களுக்குச் சொல்
லியிருப்பம். எங்களைத் துரோகியெண்டு சொன்னனீங்கள். காலம்
கடந்தாலும் இனிமேலாவது திருந்துங்கோ.
0 விமர்சனங்கள்:
Post a Comment