இஸ்லாமிய உறவுகளை புலிகள் விரட்டியபோது அன்று மக்கள் ஒற்றுமைதனை உரைக்காத புலிப்பினாமிகள் இன்று…
மக்களை என்றும் புலிப்பினாமிகள்
மந்தைகள் என எண்ணியவர்கள்
மறைமுகமாக மக்களின் பணங்களை உங்கள்
மனைவியின் வங்கி கணக்கில்
மாதம் மாதம் வைப்பிலிட்டவர்கள் புலிப்பினாமிகள்…
மாவீரர்களுக்கு ஒர் தினமென்று
மாணிக்கங்களான மக்களை ஏமாற்றி
மருதானையில் வெள்ளவத்தையில் மாடிவீடு கட்டி
மகிழ்ச்சியுடன் உறவாடிய புலிப்பினாமிகள்…
மாங்கனிகளை பறித்து உவகையுடன் உண்டவரை
மாடுகளை கலைப்பது போல் மக்களை
மாறிமாறி அங்குமிங்கும் அலையவைத்து
மாற்றானிடம் தட்டேந்த வைத்த பாசிச வெறியனை
மனநேயம் கொண்டவன் என்று உரைத்த புலிப்பினாமிகள்….
மாற்று இயக்க தோழர்களை கொழுத்தி விட்டு
மார்புதளை நிமிர்த்தி கைதட்டி ரசித்தது அடங்காமல்
மனைவிமக்களை பார்க்க சென்ற(ஜெயக்குமாரை…சுவீஸ்சுக்)
மறைத்து மண்ணுக்குள் புதைத்த தலைவனை
மாவீரன் என்று புலம்பிய புலிப்பினாமிகள்…
மறையப்போகும் புலிகளுக்கு எச்சரிக்கை செய்த
மகாத்மாவின் மனங்களை எரித்துவிட்டு
மத்தளமாய் நாட்டிலுள்ள அப்பாவிகளை
மனித வெடிகுண்டாய் அனுப்பிய மகாபாவிகளுக்கு
மருத்து நீர் வடித்து கொடுத்தனர் இந்த புலிப்பினாமிகள்…
மாற்று கருத்து கூறும் மன்னர்களை
மரியாதையில்லாமல் தலைக்கனத்துடன்
மாற்றானை தகப்பன் என்று வர்ணித்து
மனவேதனை அடையசெய்தவர்கள் புலிப்பினாமிகள்…
மனசிரிப்புடன் வாழ்ந்த இஸ்லாமிய உறவுகளை
மாலைபொழுதில் யாழிலில் இருந்து 1990லில்
மாற்றான் யாருக்கும் தெரியாமல்
மந்தைகளை போல் மக்களை விரட்டிய புலிகளுக்கு
மறைந்திருந்து ஆரவாரம் செய்தவர்கள் புலிப்பினாமிகள்…
மக்களுக்கு தெரியாமல் மந்திரவாதி ஒருவன்
மறைமுகமாக ஓப்பந்தம் செய்து (ஓ)
மந்தையில் வரியல் போட்டு வரிவேட்டை
மகிழ்ச்சியுடன் பெறவைத்தவர்கள் புலிப்பினாமிகள்…
மனட்சாட்சி தொட்டு சொல்லுங்கள்
மாறுவேடம் போட்டு வெளிநாட்டில்
மல்லாந்து படுத்து உண்டு உறங்கி
மலரமுடியா தமிழீழ கனவு காண்பது முறையா?புலிப்பினாமிகளே
கிளியின் ஒர் கிராமத்து நாயகன்
வவீதரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment