விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் பத்மநாதன் கைதாகி இருக்கமாட்டார் : முரளிதரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், செல்வராசா பத்மநாதனை கைது செய்திருக்க முடியாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அரசாங்க தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அடுத்த கனமே அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி, பத்மநாதனை விடுதலை செய்திருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், உலக நாடுகள் பத்மநாதனை கைது செய்ய இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment