ஜனாதிபதியின் அமெரிக்கா பயணமும் விசா நிராகரிப்பும்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐள்ளிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான ஜனாதிபதியின் முன்னேற்பாடுகள் குறித்து ஊடகங்களில் தற்போது செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் முதலாவது ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் என்பதாலோ அல்லது அந்தக் கூட்டத் தொடரில் அவர் கதைக்கப் போகும் விடயம் என்ன என்பது குறித்தோ அல்ல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் ஜனாதிபதி தலைமையிலான 80 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் அனைவரும் இந்தச் செய்திகள் தகவல்களை வழங்கின.
இருப்பினும் இந்த ஏற்பாடகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. எண்பதிற்கு மேற்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்த இந்தக் குழுவில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
தென் மாகாண தேர்தல் மற்றும் ஜனாதிபதியின் உடல்நிலை ஆகியவற்றைக் காரணம் காட்டி இது ரத்துச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்று வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகி இருக்கும் படையதிகாரிகள் பலருடைய விஸாவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்பக்வெலவின் கனடாவுக்கான விசா விண்ணப்பம் கனடிய தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் மேல்மாகாண முதல்வர் அலவி மௌலானாவினதும் அவரது குடும்பத்தாரதும் பிரித்தானியாவுக்கான விஸா விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் பிரித்தானியாவிற்கான விஸாவுக்காக விண்ணப்பித்த போது அவர் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலைமைகளே ஜனாதிபதி தலைமையிலான குழவினர் ஐநாவுக்கான விஜயத்தை இரத்துச் செய்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
லங்கா ஈ நியூஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment