முட்டாள்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா?
பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை : திருப்பூரில் பரபரப்பு
வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ விநாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.
இதே போல ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் இலங்கையை நோக்கி ஈழ விநாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.
காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஈழ விநாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment