பிரேதப் பெட்டியின் கண்டனம்.
மானிடா! மனிதருள் மாணிக்கங்களை
மரணத்தின் பின்னால் மணிக்கணக்கில்
மகிழ்வோடு சுமந்திருக்கின்றேன்.
மன மகிழ்வோடு புதை குளிப்பயனத்தில்
ஒன்றித்துள்ளேன்.
மரம் என்ன சொல்லப் போகின்றதென
அழுத்திப் பேசி எழுந்த மானத்தில்
அமுங்கி அமங்களம் பாடாதீர்.
தீரம் பேசி தரம் குறையமாட்டேன்.
அதைச் செய்தேன்,இதைச் செய்தேன்
எனத் தற்பெருமை பாடும் வழக்கம்
எங்கள் இனத்திடம் அறவேயில்லை.
தொட்டிலில் உங்களைத் தாங்கிய
காலம் தொட்டு கடைசிப் பயணம்
தொடரும் போதும் கூடவே வருபவர்கள்
எம்மை விட வேறு யாருளர்?
எரிந்தாலும்,புதைந்தாலும்,
எல்லாக் கணத்திலும் உங்களுக்காகவே
அர்ப்பணமாகும் வாய் பேசா
ஜீவன்கள் நாங்களென அறிவீரோ?
மரம் நான் சொல்கிறேன்,
என் உரை கேட்டு உங்கள்
சிரத்தை தாழ்த்த வேண்டாம்.
வரம் நாம் உமக்கு எமை
தரம் தாழ்த்தாது இருப்பீர்.
இனி வாரும். என் சினம் கேளும்.
கனி உண்டு கற்பம் தரித்த
காலத்தில் இருந்து இன்று வரை
கருவில் சுமக்கும் அன்னையர்
அடி மனங்களில் ஆயிரம் ஆயிரம்
ஆசைகள்,கனவுகள்,அபிலாஸைகள்
அறுவடைக்காய் பூத்துக்குலுங்கும்.
பத்து மாதம் சுமந்த அவர்களுக்கே
இத்தனை எதிர்பார்ப்புகள் இருக்கையில்
உங்களை மிகுதிக் காலங்களில் சுமந்த
அன்னை பூமியின் ஆசைகள் எதுவரை?
தாயவள் தாய்ப் பால் ஊட்டி
தூயவளாய் உயர்ந்தவளாய்
உலகெங்கும் மிளிர. நீ
பால் மறந்து சத்துணவினை
உட்செலுத்த தொடங்கிய தும்,
விழுந்ததும்,எழுந்ததும் துள்ளிக்
குதித்து விளையாடி மகிழ்ந்ததும்,
களை போக்க குடி நீரும்,
பசி போக்கிட பலவகை
உணவினைத் தந்ததும் யாரென
உன் உணர்வினை தட்டி
மீட்டுப் பார் பலதும் புரியும்.
இந்தத் தாயின் அவலம் மறந்து,
கேவலம் புலத்த்தினில் நேசம் மறந்து
வாழ்த வாழ்வும் ஒரு வாழ்வா?
கவளம் கவளமாய் உண்டு கொழுத்து
பவள விழாக் கண்டும் பலன் என்ன?
மின்சாரத்தில் சஞ்சாரமாகப் போகின்றாய்?
நான் என்ன பாவம் செய்தேன்?
உன்னோடு சேர்ந்து மாள்வதற்கு?
உன்னைத் தாங்கி இருக்கும்
ஒவ்வொரு கணமும் என் மேனி
அணலாய்க் கொதிக்கிறது.
அருவருப்பாய் இருக்கிறது.
அடுத்த பிறப்பொன்று எனக்கிருந்தால்
தேசத் துரோகிகளைத் தாங்கப்
போவதில்லையென சட்டமொன்றினை
அமுல்படுத்துவோம்.
ரி.தயாநிதி பிரான்ஸ்.
0 விமர்சனங்கள்:
Post a Comment