அம்பாறை, சம்மாந்துரையில் தமிழ் - முஸ்லிம் மக்களின் காணிகளை சிங்களவர்கள் பலவந்தமாக அபகரித்துள்ளனர்
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம மக்கள் காணிகளை வேறு பிரதேசங்களிலிருந்து வரும் சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. பரம்பரை பரம்பரையாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் காணிகளே இவ்வாறு அபகரிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வாறு காணிகளை அபகரிப்பவர்களில் ஊர்காவற்படை மற்றும் காவல்துறை ஊழியர்களும் உள்ளனர். அத்துடன், இதுவரை சுமார் 400 ஏக்கர் காணி நிலப்பரப்பு இவ்வாறு பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலவந்தாக காணிகள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அம்பாறை காவல்துறையினருக்கு காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுகுறித்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலும், சிங்களவர்கள் தொடர்ந்தும் பலவந்தமாக காணிகளை அபகரித்து வருவதாகவும், அபகரிக்கப்பட்ட காணிகளில் கட்டிடங்களை நிர்மாணித்து வருவதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இதுகுறித்து அம்பாறை மாவட்டச் செயலருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, நீதிமன்ற உத்தரவின்றி, இவ்வாறு குடியேறியுள்ளவர்களை அப்புறப்படுத்தவோ, நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவோ முடியாதெனக் கூறினார்.
எவ்வாறாயினும், இவ்வாறு குடியேறியுள்ளவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment