முதற்கட்ட புலனாய்வுகளின்படி ஷியாமல் கொலை செய்யப்பட்டுள்ளார் - ஐ.நா
தான்சானியாவில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷியாமல் ராஜபக்ஷே கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட புலனாய்வுகள் கூறுகின்றன என ஐ.நா தெரிவித்துள்ளது.
அருஷா தான்சானியாவிலுள்ள வீட்டில் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மருமகன் ஷியாமல் ராஜபக்ஷ கொலை செய்யப்பட்டுள்ளார் என முதற்கட்ட புலனாய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான பேச்சாளர் மைக்கேல் மொன்ராஸ் நியூ யோர்க்கிலுள்ள பத்திரிகைகளுக்கு திங்கட்கிழமை கூறியுள்ளார். ஷியாமலின் மரணம் பற்றிய புலனாய்வுகளை தான்சானியா போலீசாரும் இலங்கை போலீசாரும் நடத்தி வருகின்றனர்.
புலனாய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள் இன்னமும் ஐ.நா வுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதால், அதற்கு முன்னர் அது பற்றிய மேலதிக தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு இப்போது தர முடியவில்லை என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment