சர்வதேச போதைப் பொருள் வர்த்தகம்: புலிகள் இடத்தை பிடிக்க கடும் போட்டி
மும்பை: விடுதலைப் புலிகள் தோல்விக்குப் பின், அவர்கள் வசம் இருந்த போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு உலகின் முன்னணி மாபியா கும்பல்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றன.
இதில், சீனாவைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல், அது தொடர்பான வர்த்தகத்தில் ஏராளமான மாபியா கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. மியான்மர், லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளில் உள்ள முக்கோண வடிவிலான 35 ஆயிரம் ச.கி.மீ., பகுதி, சர்வதேச அளவில் போதைப் பொருள்கள் அதிகம் விளைவிக்கப்படும் பகுதிகளாக உள்ளன.
இங்கு சட்ட விரோதமாக விளைவிக் கப்படும் போதைப் பொருள்கள், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரபல மாபியா கும்பலால் கடத்திச் செல்லப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் சொர்க்கமாக இந்தப் பகுதி கருதப்படுகிறது. சீனாவைச் சேர்ந்த "டிரியாட்' என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல், இதில் மிகவும் பிரபலம்.
விடுதலைப் புலிகளும் இந்தப் பகுதியில் போதைப் பொ ருள் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த அமைப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, அவர்கள் வசம் இருந்த போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளைத் தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு முக்கிய மாபியா கும்பல்கள் போட்டி போட்டு வருகின்றன. மும்பை தாதா தாவூத் இப்ராகிம் கும்பல், இந்தோனேசியா, ரஷ்யா, தாய் லாந்து, மலேசியா நாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகக் கும்பல்களுக்கு இடையே, இதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், சீனாவின் "டிரியாட்' கும்பல் தான், இதில் முன்னணியில் உள்ளது.
Thinamalar
0 விமர்சனங்கள்:
Post a Comment