இரண்டு இலங்கையர்கள் ஜோர்தானில் மரணம்
இரண்டு இலங்கையர்கள் ஜோர்தானில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கைப் பெண் ஒருவரை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருளை ஊற்றி குறித்த பெண் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் குறித்த இலங்கையர் தமக்கு தமே தீயிட்டுக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜோர்தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
தீவிர தீக்காயங்களினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுக்க மற்றும் களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை கொண்டு வருவதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment