முட்கம்பியின் பின் நிற்கும் அப்பாவித்தமிழர்கள் மேல் அனுதாபலைகள் என்றபெயரில் முதலைக்கண்ணீர்வடிக்கும் வெளிநாட்டுதமிழர்களின் மாய்மாலம் என்ற விசனம் அதிகம்
„மனமிருந்தால் இடமுண்டு“ இன்;று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமது தாய்நாட்டு தமிழ் உறவுகளுக்கு எதையும் கொடுக்க முடியாது உள்ளார்கள். அவர்கள் பலவழிகளில் அரசை குற்றம் கூறுவது நியாயமாக இருந்தாலும், கடந்த காலத்தில் புலிகளுக்கு பலவழிகளில் பணத்தை கொடுத்து புலிகளின் பிணாமிகளை வளர்த்தார்கள்
ஆனால் இன்று முட்கம்பியின் பின்நிற்கும் வன்னி அப்பாவிகளுக்கு எதையும் கொடுக்க மறுக்கின்றார்கள். தாம் கொடுப்பது அங்கே சரியான முறையில் கொடுபடுவில்லை என்று வவுனியா அரசாங்க அதிகாரிகளை திட்டி வருவது எந்தவிதத்தில் நியாயமானது?
நாம் இதுவறைகாலமும் வவுனியா அரசாங்க அதிகாரி களுடன் நேரடித் தொடர்புகளை எடுக்கவில்லை. அவர்களுக்கு கிடைக்கும் படி பொதிகள் எதையும் அனுப்பவில்லை. அவர்களிடம் என்ன தேவை என்று கேட்கவில்லை இப்படியாக பல விடையங்கள் இருக்கும் பொழுது. எப்படி??? அந்த அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தமுடியும்?
இன்று “முட்கம்பித்தமிழர்கள்“ அப்பாவிகள் மேல் அக்கரைகொண்டவர்கள் போல் பல நாடுகளில் நடத்தும் மக்கள் போராட்டம் வீணர்களின் ஆர்ப்பாட்டம். இலங்கை அரசை மட்டுமல்ல அங்கே நேர்மையாக கடமை கண்ணியத்தோடு நடக்கும் அரசாங்க அதிகாரி களையும் குற்றசாட்டுகின்றார்கள் ஆனால் இத்தகைய கண்மூடித்தனமான நடவடிக் கையும் அரசியல் பாணியை மட்டும் சித்தரிக்கின்றது.
அங்கே முட்கம்பியின் பின்நிற்கும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றபோவதில்லை என்பதுதான் உண்மை. தலைவர் பிரபாகரன் மே17ம் திகதி; காலை கருணா என்ற விநாயகமூர்தியுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்பின் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி தலைவர் பிரபாகரனை கொன்றுள்ளதாக செய்திகளை பரப்பும் இவர்கள் என்றுமே உண்மையை தெளிவாக மக்களுக்கு எதையும் சொல்லப் போவதில்லை.
ஆனால் எது எப்படியோ, தலைவர் பிரபாகரனை கொன்றது சட்டமுறைகளின் கீழ் தவறானதாக இருந்தாலும் இராணுவ நடவடிக்கையில் அவைகளை யாரும் முறைப்படுத்த முடியாது. இந்தநேரத்தில் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் பினாமிகள் பலர் தமது எண்ணத்திற்கே பணங்களை கையாண்டு மக்களை நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார்கள்.
அதுபோல் பணமோசடிகளும் சொத்து மோசடிகளும் பாடசாலை நிர்வாக குழப்பங்களும் கோவில் பணமோசடிகளும் குழப்பங்களும் அதிகரித்து வருகின்றது. இதனால் இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் பல பிரிவுகளாக தமிழர்களை; பணமோசடிகளுக்குள் இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றார்கள்.
ஆனால் பிரபாகரன் இல்லாத போராட்டம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்ற எண்ணம் மக்களுக்கு இன்றும் வரவில்லை இதனால் அப்பாவிகளை ஏமாற்றும் அண்ணன்மார்களும் அக்காமார்களும் பணமழையில் குளித்து அப்பாவிகளின் வைத்தெரிச்சளில் குளிர்காயும் நிலை மாறவேண்டும். இதனை ஊடகங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கவேண்டும்.
பொது நிர்வாகங்கள் தமது நேர்மையான நீர்வாகத்தை கடைப்பிடிக்கவேண்டும். அப்பாவிகளுக்கு உதவுவதாக எண்ணி தமது பையை நிறப்பும் திட்டங்கள் அத்தனையும் முறியடிக்கவேண்டும். மற்றவர்களை குற்றம் குறை கூறாது உங்களின் கடமையை இன்றே செய்ய முன்வாருங்கள். இதற்கு வவுனியா அரசாங்க அதிகாரி களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு நேரடியாக உதவ முன்வருவதற்பு பல வழிகள் உண்டு அத்தனையும் மறந்து வெளிநாடுகளில் மாய்மாலம் கொட்டுவதால் மக்கள் குறைகள் என்றுமே தீராது, என புலம்பெயர் பணம் புடுங்கிகளுக்கு சுட்டிக்காட்டும் தமிழ் ஏடு ஆசிரியர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment