தமிழ் மக்களின் இன்னல்களையும் துயரங்களையும் ......
தமிழ் மக்களின் இன்னல்களையும் துயரங்களையும் பாரளுமன்றத்தில் எடுத்து கூறதாதன் மூலம் வரலாற்று துரோகத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்துள்ளது – வீ. ஆனந்தசங்கரி
வன்னி முகாம்களில் இருக்கின்ற மக்களை சுயகௌவரத்துடனும் மரியாதையுடனும் பாதுகாப்பாக குடியேற்றவதோடு எம்மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் - தி. சிறீதரன்
தமிழ் மக்களின் இன்னல்களையும் துயரங்களையும் பாரளுமன்றத்தில் எடுத்து கூறதாதன் மூலம் வரலாற்று துரோகத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்துள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட மாநகர சபைக்கான தலைமை வேட்பாளருமான வீ ஆனந்தசங்கரி ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறுமாதத்தில் தமிழ் மக்கள் சொல்லொன்னா துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வந்ததை பாரளுமன்றத்தில் எடுத்து கூறாததன் மூலம் வரலாற்று துரோகத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்துள்ளமையை கருத்தில் கொண்டு யாழ் மாநகர மக்கள் செயற்படுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.
இத்தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் அரசும் அதன் கூட்டுகட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் எனவும் ஏன் எனில் தமிழ் மக்களை அழிவுக்கு உள்ளாக்கிய இதே அரசு அந்த மக்களை இன்று தடுப்பு முகாமில் வைத்து கொண்டு தனது அரசியல் தேவைகளுக்காக பண்டமாற்று செய்வதாக குற்றம்சாட்டினார். எமது மக்களை பண்டமாற்றம் செய்வதற்கு இவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பினார்.
கண்ணிவெடிகள் அதிகமாக வன்னியில் புதைக்கபட்டிருப்பதால் மக்களை மீள் குடியேற்ற முடியாமால் இருப்பாதாக அரசு கூறிவருகிறது ஆனால் அதை அந்த கிராம மக்களை கொண்N;ட மிக இலகுவாக அகற்றாலாம் என நான் அரசுக்கு கூறிய ஆலோசனையை அரசு ஏற்றுக்ககொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்
தமிழ்மக்களுக்கு அரசு செய்துள்ள அல்லது செய்கின்ற மாபெறும் துரோகத்தனத்தை எல்லாம் யாழ் மாநகர மக்கள் கருத்தில் கொண்டு வெற்றிலை சின்னத்தை தோற்கடித்து உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட மாநகர சபைக்கான தலைமை வேட்பாளருமான வீ ஆனந்தசங்கரி ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்
ஜனநாயகரீதியான செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்று எடுக்கமுடியும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் பொது செயலாரும் யாழ் மாநகர சபைக்கான வேட்பாளருமான சிறிதரன் சுகுமார் ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்
இத் தேர்தலில் அதிக அளவு பெண்கள் அக்கறை கொண்டிருப்பாதாகவும் நீண்ட நாட்களுக்கு பின்பு நாங்கள் மக்களை நோக்கி செல்ல கூடிய ஒரு சந்தர்ப்பம் தற்போது தான் கிடைத்து உள்ளதாகவும் இதன் ஊடாக எதிர்காலத்தில் ஓருமக்கள் இயக்கமாக கட்டி எழுப்பவேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார்
அதேவேளை வன்னி முகாம்களில் இருக்கின்ற மக்களை சுயகௌவரத்துடனும் மரியாதையுடனும் பாதுகாப்பாக குடியேற்றவதோடு எம்மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் எனவும் அண்மையில் ஜனாதிபதியுடான சந்திப்பில் தெரிவித்தாக தெரிவித்தார்
இந்த யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் யாழ் நகரத்திற்கான பல அபிவிருத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அதற்கான அதிகாரங்களை யாழ் மக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் பொது செயலாரும் யாழ் மாநகர சபைக்கான வேட்பாளருமான சிறிதரன் ரிபிசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்
V.Ramaraj (Thamil broadcasting corporation-London)
00 44 7817063682 , 00 44 208 930 5313






0 விமர்சனங்கள்:
Post a Comment