கே.பியின் கைதும் அதைத் தொடர்ந்து வரும் திடுக்கிடும் உண்மைச்சம்பவங்களும்!
புலிகளியக்கத்தின் தற்போதைய தலைவர் என தன்னைத் தானே அறிமுகப்படுத்தியுள்ள குமரன் பத்மநாதன் அல்லது கேபி என அழைக்கப்படும் சண்முகம் குமரன் தர்மலிங்கம் வயது(49) தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதை இலங்கை அரசும் உறுதி செய்துள்ளது.
இவரது கைதின் பின்னணி தொடர்பான செய்திகள் தற்போது கசிந்த வண்ணம் உள்ளது. அவர் கைது செய்வதற்கு முக்கிய காரணமாக புலம்பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்ட சொத்து மற்றும் பதவிப் போட்டியே காரணம் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கே.பி. என்ற பத்மநாதனுக்கும் அமெரிக்காவில் உள்ள புலிகளின் விஸ்வநாதன் உருத்திரகுமார் என்பவருக்குமிடையே தலைமை பொறுப்பு தொடர்பாக முறுகல் நிலை நிலவி வந்தது. பின்னர் உருத்திரகுமாரை நாடு கடந்த தமிழீழத்தின் செயற்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்களுக்குள் மட்டுமல்ல புலிகளின் கணிசமானோர் கே.பி.யை துரோகி என்றும் வர்ணித்து தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகி கே.பி. என்றும் இவராலேயே பிரபாரகரன் கொல்லப்பட நேர்ந்தது என்றும் புலிகளின் ஒருசாரரின் கருத்து. இந்த நிலையிலேயே கே.பி. கைது செய்யப்பட்ட விடயத்தை இலங்கை அரசு வியாழக்கிழமை (நேற்றையதினம்) வெளியிட்டது.
இதனை ஆரம்பத்தில் பலரும் நம்பமறுத்தபோதும், அதை புலிகளின் பினாமிகளின் இணைத்தளத்தின் ஊடாக புலிகளின் பினாமிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இக் கைதுகளின் தொடர்ச்சியாக மேலும் பலர் ஜரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளில் கைது செய்யப்படலாம் என்றும் நிதி வசூலிப்பு செய்தோர், ஆயுத கொள்வனவுக்கு உதவியோர் என்பது உட்பட வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து விபரங்கள் கூட கே.பி. மூலம் அம்பலத்திற்கு வரவுள்ளதுடன் இதன் தொடர்ச்சியாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமரன் பத்மநாதன் கைதின் பின்னணியில் புலிகள், புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பிரபாகரனால் நிமியக்கப்பட்ட கே.பி. கைது செய்யப்படுவதற்கு தகவல் வழங்கியோர் புலிகளே என்றும் தெரியவந்துள்ளது. புலிகளுக்குள் ஏற்பட்ட பதவிப்போட்டி, சொத்து பிரச்சினைகள் காரணமாகவே கே.பி.யை பற்றிய இரகசிய தகவல்களை புலிகளே வழங்கி அவர் கைது செய்யப்படுவதற்கு உதவியதாக இன்னுமொரு தகவல் தெரிவிக்கின்றது. எது என்னவாக இருந்தாலும், இன்னும் பல திடுக்கிடும் தகவல்களும் கைதுகளும் இடம்பெற போகின்றது என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது. இதை எமது வெளிச்சம் இணைத்தளம் உடனுக்குடன் வெளிக்கொண்டு வரும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment