தேசிய தலைவர் பிரபாகரன் பதுங்குவதற்காக பதுங்கு குழிகள் தேடுகிறார் ...
பிரபாகரன்- ஐயோ! ஐயோ! ஒருகால் அங்கால எட்டி பார்பிள்ளை! எதோ விமான வாற சத்தம் ஒன்றுகேட்குது நான் நினைக்கிறன் குண்டுபோடுகின்ற விமானத்தின்ர சத்தம் போலதான் எனக்கு கேட்கிறது. நான் உன்ர பிள்ளைகளுடன் பதுங்குகுழிகுள் பதுங்கிகிடக்கிறன் நீ ஒருக்கால் கொஞ்சம் வெளியில போய் எட்டிபார்த்திற்று வாறயா பிள்ள எனக்கென்றால் சரியான பயமாககிடக்குது.
பிள்ளைகளின் தாய்- நான் என்ர பிள்ளைகளை உங்களோடு விட்டுவிட்டு போக மாட்டன் நீங்க வேணும்என்றால் வேற பதுங்குகுழிக்குள் போய் பதுங்கி கொள்ளுங்கள். என்ர பிள்ளைகள் ஏற்கனவே உங்களை கண்டு பயந்து போய்கிடக்குதுகள். நான் குடுக்கும் தண்ணீரை கூட வேண்டி குடிக்கமாட்டன் என்று சொல்லுதுகள்.
பிரபாகரன்- ஏன் பிள்ள என்னைக்கண்டு உன்ரபிள்ளைகள் பயப்பிடுதுகள்? அதுகள் விமானம் வாற சத்தத்தை கேட்டுத்தான் பயப்பிடுகுதுகள் போலதெரியுது...
பிள்ளைகளின் தாய்- அதுகள் ஒன்றும் விமானம் வாற சத்தத்தை கேட்டு பயப்பிடவில்லை. அதுகளுக்கு இது எல்லாம் பழகிபோய்விட்டது. அதுகள் உங்களை கண்டுதான் பயப்பிடுகுதுகள் நீங்க ஒரு பிள்ளை பிடிகாரன் என்று இங்க வன்னியில வாழுகிற பிள்ளைகள் அவ்வளவுபேருக்கும் தெரியும் இப்ப உள்ள நிலமையில உங்கட இயக்கத்து பொடியல் 12வயது பிள்ளைகளையும் பயற்சிக்கு அழைக்கினமாம் அதுக்கு பயந்துதான் இங்க முக்காசிபேர் நாங்கள் பகல்லகூட பதுங்கு குழிகளில் வந்து தங்கிகொள்ளுறம்.
பிரபாகரன்- அப்படி என்றால் உன்ர பிள்ளைகளுக்கு விமானத்தை கண்டால் பயமில்லையா? ஏன் பிள்ளை பொய்சொல்லுற நேற்றும் சிறிலங்கா விமானத் தாக்குதல்களினால் பொதுமக்கள் இருவர் இறந்துவிட்டதாக எனக்கு செய்தி கிடைத்தது நீ என்டாவென்றால் இப்படி சொல்லுகிறாய்.?
பிள்ளைகளின தாய்- விமானம் வரும் சத்தத்தை கண்டவுடன் உங்களின் போராளிகள் உங்களை மாதிரி ஓடிவந்து நாங்கள் இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் ஆயுதத்துடன் வந்து புகுந்தால் அதைமேல இருந்து பார்துக்கொண்டு வரும் விமானபடையினர் புலிகள்தான் பதுங்கு குழிகளுக்குள் பதுங்குகிறார்கள் என்று நினைத்து குண்டை போடுகிறாங்கள் மேல இருக்கிறவர்களுக்கு தெரியுமா நீங்கள் பொதுமக்களுக்களுக்குள் புகுந்து தப்பித்து கொள்கிறீர்கள் என்று? அப்ப விமானப்படையினர் குண்டைபோடும்போது எங்களமாதிரி பொதுமக்கள்தானே சாவாங்கள்?
பிரபாகரன்- எனக்கு இதெல்லாம் தெரியாது பிள்ளை!
பிள்ளைகளின் தாய்- உங்களுக்கு எப்படி நாட்டில என்ன நடக்கிறது என்று தெரியும்? நீங்கள்தானே 30வருடமாக கிடங்குக்குள் படுத்துக்கிடக்கிறதாக சனங்கள் சொல்லுகிறார்கள்? பழைய காலத்து அரசர்கள்கூட இரவு நேரங்களில் மாறு வேடத்திலேயாவது தங்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக உலாவி திரிவார்கள். ஆனால் நீங்கள் என்னடாவென்றால் சதாகாலமும் கிடங்குக்குள் கிடந்தால் எப்படி நாட்டில் நடப்பதை அறியமுடியும்?
பிரபாகரன்- மாறவேடத்தில போனாலும் என்னை கண்டுபிடிச்சுபோடுவாங்கள் பிள்ளை. ஏன்என்றால் என்னைபோல கட்டை கொழுத்த உருவத்தோடு வன்னிக்குள் யார் இருக்கிறார்கள்? நீயே சொல்லு பார்பம் அதைவிட இவன் பொட்டன் என்னை போட்டுத்தள்ளுறத்துக்கு தரணம் பார்த்துக்கொண்டு திரியிறான். ஆதாலதான் நான்வெளியில எங்கும் வெளிக்கிடுவதில்லை. எல்லாம் என்ர தலையொழுத்து பிள்ளை இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டில இருக்கும் எங்கட தமிழர்கள் அள்ளி அள்ளி கொடுக்கும் காசாலதான் வெளிநாட்டுக்காரங்கள் எங்கட பிரச்சனையை தீர்த்து வைக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறாங்கள். இந்த சண்டையை நானும் மகிந்தவும் நிறுத்த நினைத்தாலும் முடியாதுபோல தெரிகிறது.
வெளிநாட்டில இருக்கும் எங்கட தமிழர்கள் கொடுக்கும் காசுக்கு பதிலாக வெளிநாட்டுகாரர்கள் ஆயுதங்களை கப்பல், கப்பலாக கொண்டுவந்து முல்லைதீவில் இறக்கி விட்டுவிட்டு போறாங்கள.; அவைகளை எனக்கு பார்த்தவுடன் தொடந்தும் சண்டைசெய்ய வேண்டும் போல் தெரிகிறது. அதைவிட வெளிநாட்டுக்காரங்கள் தொலைபேசியில் தொடந்து பேசுறாங்கள் தாங்கள் எப்படியும் ஆயுதம கொண்டுவந்து தாராங்களாம் என்னைதொடர்ந்தும் போர் செய்யட்டுமாம். அப்படிபோர் செய்யாவிட்டால் வெளிநாடுகளில் வாழும் எங்கடைய ஆக்கள் காசு தரமாட்டாங்களாம் என்கிறாங்கள் அப்ப என்னை என்னசெய்ய சொல்லுற பிள்ளை! நீயே சொல்லு பார்போம்
0 விமர்சனங்கள்:
Post a Comment