கே.பி புலிகளின் இரகசியத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளார்
கே.பி கைதாகியுள்ள 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் ஆதரவாளர்கள், உள்நாட்டு,வெளிநாட்டு பிரதிநிதிகள் பற்றிய சகல தகவல்களையும் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
கே.பியின் தகவல்களை அடுத்து எதிர்வரும் தினங்களில் பல சுற்றிவளைப்புகளை மேற் கொள்ளவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. மலேசியாவில் கே.பி கைதாகும் சமயம் இந்தோனேஷிய அச்சே பிரதேசத்தில் நாடு கடந்த தமிழீழம் அமைப்பது குறித்து ஆலோசனையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை புலனாய்வு பிரிவினரின் தனித்த முயற்சியினாலும், ஏனைய நான்கு நாடுகளின் உதவியுடனும் கே.பியை கைது செய்ய முடிந்துள்ளது. புலிகளின் சர்வதேசப் பிரிவு தலைவர்களுள் ஒருவரான அறிவழகனுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடுகளே அவர் கைது செய்யப்படுவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது என்று தெரிய வருகின்றது. கே.பி தற்பொழுது வெளியிட்டுள்ள தகவல்களின் படி அவர் சந்தித்த தூதுவர்கள் மற்றும் பிரபல சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பற்றிய விபரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளன.
கே.பி கைதான செய்தியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதிக்கு அறிவித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியுற்ற ஜனாதிபதி முழுமையாக புலிகளை முடக்கி விட்டதற்காக பாதுகாப்பு செயலாளருக்கும் புலனாய்வுப்பிரிவினருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment