தமிழ்ஈழ மண் வேண்டும் பணப் புலிகள்!
துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், தம்மை கேள்வி கேட்பவர்கள்கூட துரோகிகள்தான் என்றும் தலைவர் உயிர் இருக்கும்வரை தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என புலிகள் கொன்று குவித்தது எப்படி சாதாரணமோ அதேபோலத்தான் தற்போது வெளியாகியுள்ள தமிழர்களை கண்ணைக்கட்டி சிங்கள இராணுவம் சுடும் காட்சியும். இந்தக் காட்சிப்படுத்தல் உண்மையானதா? புனையப்பட்டதா? என்ற ஐயப்பாடு முன்வைக்கப்பட்டாலும், இது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை.
ஜே.வி.பியின் கிளர்சியை ஒடுக்குவதற்கு பிரேமதாசா அரசாங்கம் எவ்வாறான அராஜகத்தைப் புரிந்தது என்பதை முழு உலகமும் அறியும். வன்முறை மூலம் தமக்கு எதிரான சக்திகளை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பலம்பொருந்தியவர்கள் நினைக்கிறார்களோ அதன்பிறகு சொந்த இனம், ஏன் சொந்தம் - பந்தத்தைப் பற்றிகூட கிஞ்சித்தும் சிந்திக்காது.
கண்ணைக்கட்டி பின்பக்கமாக இராணுவம் சுட்டுக்கொல்வதற்கும் இறுதிநேரத்தில் தமிழ் மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள் தப்பி ஓடும் போது புலிகள் பின்னால் சுட்டுக்கொன்றதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? முன்னது காட்சியாக இருக்கிறது. பின்னது சாட்சிகள் நிறைய இருக்கின்றன. எனவே புலிகள் கண்டபடி சனங்களை சுட்டுத்தள்ளவில்லை என்றால்தான் அதிர்ச்சி! சிங்கள இராணுவம் தமிழரை சுட்டுத்தள்ளவில்லை என்றால்தான் அதிர்ச்சி!
இதைச்சாட்டாவவைத்து சர்வதேசமும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் கண்ணியமாகவா நடந்துகொண்டன? சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஒரு அளவுகோலைக் கொண்டிருக்கின்றன. கீழைத்தேசய நாடுகளின் மனித உரிமை மீறல்கள் அந்த அளவுகோளில் பூதாகாரமாகக் காட்டும்! உடனே மனித உரிமைவாதிகளுக்கு மனம்பொறுக்காது. “ஐயகோ ஒரு மனித இனமே அழிக்கப்படுகிறது” என்று மார்பிலடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
பிறகென்ன தமிழ்ஈழ மண் வேண்டுபவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இவர்கள் அவலை (Not She) நினைத்து உரலை இடிக்கிற மாதிரி எதையாவது இடித்து பணம் பண்ணிக்கொள்வார்கள்.
இதற்குள் புலன்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடனும் இலங்கை தமிழர் பிரதிநிதிகளுடனும் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காணவேண்டும் என்று அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் வலியுறுத்தியிருக்கிறார்.
புலன்பெயர் தமிழர் பிரதிநிதிகள் அனைவரும் பண முதலைகள். இவர்கள் புலிகளை முன்னிறுத்தி தமது வியாபாரத்தை திறம்பட நடத்திவந்தவர்கள். புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இவர்கள்பாடு திண்டாட்டம் தான் என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் ஈவிரக்கமற்ற இந்தக் கூட்டம் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களைவைத்து பணம் பண்ண தொடங்கியிருக்கிறது.
இந்தக் கூட்டத்துடன் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கம் ஈடுபடவேண்டும் என்பது தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள துன்பம் விலகுவதற்கான அறிகுறிகள் இப்போதைக்கில்லை என்பதையே கோடுட்டுக்காட்டுகிறது. மக்களுக்காக இல்லாமல் மண்ணுக்காக வன்முறையில் ஈடுபட்டு மாண்டுபோன புலிகள் மாதிரி, இவர்கள் மக்களுக்காக இல்லாமல் பணத்துக்காக எதையும் செய்து பிழைத்துக்கொள்வார்கள்.
இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எத்தனையோ இருந்தும் அதையெல்லாம் கணக்கிலெடுக்காது இலங்கை அரசாங்கத்துடன் வீரம் பேசுவதையும், பயமுறுத்துவதிலுமே தமது நேரத்தையும் காலத்தையும் வீணடித்துவருகிறார்கள். தடுப்பு முகாமிலிருக்கும் மக்களின் வேதனைகளை, கஷ்டங்களை உணர்ந்துகொள்ளாமல் இப்போதும் சுயநிர்ணயம், தனிநாடு என்றுதான் கோஷங்கள் போடுகிறார்களே தவிர வேதனைகளுடன் வாழும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கத்துடனோ அல்லது சர்வதே சமூகங்களுடனோ தொடர்புகொள்கிறார்களோ என்றால் இல்லை.
செத்தும் கெடுத்தான் சுப்பன் என்பதுபோல வேலுப்பிள்ளைன்ர சுப்பன் இந்த வியாபாரக் கூட்டத்தை பணக்கொழுப்பேற வைத்துவிட்டு போய்சேர்ந்துவிட்டான். தமிழர் செய்த பாவம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
இருப்பினும் இவர்களுடன் பேச்சுவார்த்தை செய்துதான் ஆகவேண்டும் என்னும் நிலை ஏற்படுமானால் இலங்கை அரசாங்கம் இரண்டு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தவேண்டும்.
ஒன்று: சர்வதேசத்திலிருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் அழிவடைந்துபோன தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள எல்லையோர கிராமங்களை அபிவிருத்தி செய்ய செலவழிக்க வேண்டும்.
இரண்டு: சர்வதேசத்திலிருந்து இயங்கிய புலி முக்கியஸ்தர்களையும், புலிகளுக்காக இயங்கியவர்களையும் இலங்கைக்கு நாடு கடத்த அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவர்களில் புலி முக்கியஸ்தர்களை நாலாம் மாடியில் வைத்து லாடன் கட்டுவதுடன் புலிகளுக்காக இயங்கியவர்களை தமிழ் பிரதேசத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் குடியமர்த்த வேண்டும் என்று நாம் அரசாங்கத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்.
- சதாசிவம். ஜீ.
0 விமர்சனங்கள்:
Post a Comment