விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக்கோரும் மனு அமெரிக்க நீதிமன்றால் நிராகரிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக் கோரும் மனுவினை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 2001 ஆம் ஆண்டில் சில குழுக்களை பயங்கரவாதக் குழுக்களெனப் பிரகடனம் செய்யவும் அவற்றின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் . அவற்றுக்கான உதவிகளையும் சேவைகளையும் தடை செய்யவும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரமளித்து நிறைவேற்று கட்டளை பிறப்பித்திருந்தார்.
இதற்கு எதிராக அமைப்பு ஒன்று பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கிவிடுமாறு தாக்கல் செய்த மனுவை அமெரிக்க லொஸ் ஏஞ்ஜல்ஸ் மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment