இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Saturday, August 15, 2009

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை கொல்வதற்கு பயங்கரவாதிகள் தீட்டிய திட்டம் அம்பலம்


பயங்கரவாதிகளின் உதவியுடன் இப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை படுகொலை செய்ய சிங்களவர் திட்டமிட்டிருந்தது இப்போது தெரியவந்துள்ளது என்று “டெய்லி மிர்ரர்’ என்ற பத்திரிகைத் தெரிவிக்கிறது. இலங்கையின் தென் மாகாணத்தில் கவுன்சிலர் டேனி ஹிததீயக என்பவர் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மதுஷா லட்சுமணன் என்பவரைப் போலீஸார் விசாரித்தபோது இந்தச் சதி அம்பலமானது.

ராஜபக்ஸவை தென் இலங்கையில் உள்ள அவருடைய சொந்தக் கிராமமான மதுமுலன என்ற ஊரில், மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக கொழும்பு நகரின் புறநகரான வெள்ளவத்தையில் மே 14-ம் திகதி தற்செயலாக நடந்த ஒரு சோதனையின்போது புலிகள் பயன்படுத்தும் தற்கொலைப்படை அங்கி சிக்கியது.அப்போது அந்த வீட்டிலிருந்த ஓர் இளைஞர் 7-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். மேற்கொண்டு துப்பு கிடைக்காமல் திணறியப் போலீஸாருக்கு மதுஷா லட்சுமண் தெரிவித்த தகவல்கள் சதியை அம்பலப்படுத்தியிருக்கின்றன.

சமன் சந்தனா என்ற சிங்கள நபரு ஒருவரின் சகோதரர் எச். ரூவான் இலங்கை ராணுவத்தில் பணிபுரிந்தார். 2000-வது ஆண்டில் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு ராணுவ வீரரான ரூவான் காணாமல் போய்விட்டார். அவருக்கு என்ன ஆனது என்று இலங்கை ராணுவம் சமன் சந்தனாவுக்குத் தகவல் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் மதுஷா லட்சுமண் அவருக்கு அறிமுகமானார். தன்னுடைய சகோதரர் காணாமல் போன விஷயம் குறித்து அவர் லட்சுமணிடம் கூறி வருத்தப்பட்டார். இந்நிலையில் பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளில் சிலரை எனக்குத் தெரியும் அவர்களை அறிமுகப்படுத்துகிறேன், அவர்கள் மூலம் நீங்கள் உங்கள் சகோதரர் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று லட்சுமண் அவரிடம் தெரிவித்தார். இதை அடுத்து வவுனியாவில் புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த ஜூட் என்பவரிடம் சமன் சந்தனாவை அறிமுகப்படுத்தினார் லட்சுமணன். அதன் பிறகு சந்தனாவுக்கு உதவி செய்வதாக வாக்களித்த பயங்கரவாதிகள், தற்கொலைப் படையைச் சேர்ந்த புலிகளுக்கு கொழும்பில் மறைவிடத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பதில் கோரிக்கை விடுத்தனர். அதை சந்தனா ஏற்றுக்கொண்டார்.

சந்தனா தன்னுடைய சகோதரர் புலிகளால் கைது செய்யப்பட்டாரா என்று அறிய கிளிநொச்சிக்குக் கூட புலிகளின் உதவியோடு சென்றிருக்கிறார். அப்போது இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடுமையாக போர் நடந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வெள்ளவத்தையில் அடுக்குமாடி வீடொன்றில் சிங்களவர்கள் குடியிருக்கும் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கிக்கொள்ள சந்தனா வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இடத்தில்தான் தாமோதரம்பிள்ளை சுஜீந்திரன் என்ற புலிகளின் தற்கொலைதாரியும் தங்கியிருந்தார். அவருடைய நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்த சில சிங்களவர்கள் போலீஸாருக்கு ரகசியமாக துப்பு கொடுத்தனர்.

போலீஸார் அந்த குடியிருப்பு வளாகத்தைச் சூழ்ந்துகொண்டு வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்தியபோது சுஜீந்திரன் 7-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த வீட்டில் தற்கொலைப் படை வீரர்கள் அணியும் 4 மேல்சட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் வெடிகுண்டுகளை நிரப்பித்தான் தற்கொலைப்படையினர் தாக்குவது வழக்கம்.

பிறகு மேற்கொண்டு சரியான துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தென் மாகாணக் கவுன்சிலர் கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணனைக் கைது செய்தபோது எல்லா விவரங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன. எனவே லட்சுமணனை இந்த மாதம் 17-ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூடுதல் மாஜிஸ்திரேட் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டிருக்கிறார்.

அவரை கொழும்பு கிரைம் டிவிஷன் (சி.ஐ.டி.) என்ற தனிப்படை போலீஸார் தங்கள் காவலில் எடுத்துத் தீவிரமாக விசாரிக்கப் போகின்றனர். ராஜபக்ஸவை விரும்பாத சிங்களர்கள் எத்தனைபேர் இப்படி புலிகளுடன் இன்னமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று அறியவும் சிங்கள மக்களிடையே விடுதலைப் புலிகள் எப்படி ஊடுருவுகிறார்கள் என்று அறியவும் இந்த விசாரணை பயன்படும் என்று கூறப்படுகிறது.

மஹாவலி

PLOT TO ASSASSINATE PRESIDENT SURFACES

Murder suspect now in prison to be handed over to CCD for questioning


A plot to carry out a suicide attack on President Mahinda Rajapaksa in his hometown Madamulana with the involvement of a suspect arrested in connection with the killing of Southern Provincial Councilor, Danny Hiththetiyage, came to light at the Mount Lavinia Magistrates court yesterday.

The Attorney General made a special request to the Magistrate to order the prison authorities to hand over the suspect Madusha Lakshan to the Colombo Crime Division (CCD) for questioning over the alleged plot.

Making the application to get the suspect under CCD custody, Senior State Counsel Dileepa Peiris said the findings had revealed that the suspect had a personal animosity

against the President and he had brokered with the LTTE to get the support of a resident in Angunakolapelessa to carry out a suicide attack.

Counsel Peiris said the plot was uncovered following a detailed statement given by Saman Chandana of Angunakolapelessa who was arrested during a cordon and search operation in the Wellawatte railway station area on April 15.

Making a statement to the CCD Saman Chandana had said he was allegedly introduced to the LTTE by Madusha Lakshan whom he met at the Negombo prison. Saman Chandana’s brother, H. Ruwan Chandana had been in the Army and gone missing after an LTTE attack on October 2000. Saman Chandana one day had gone to the Negombo prison to meet a friend who was in remand and there he had come to know Madusha Lakshan who was by then remanded in connection with the murder of Southern Provincial Councilor, Danny Hiththetiyage, SSC Dileepa Peiris told the Magistrate.

Madusha had promised to help Saman Chandana to find his brother and had introduced one Jude, the leader of LTTE intelligence Unit in Vavuniya. Subsequently Saman Chandana had met Jude in Vavuniya and he had even gone to Kilinochchi to meet some LTTE leaders.

Promising to help Saman Chandana, the LTTE leaders in return had requested him to facilitate their suicide cadres by giving them residence in Angunakolapelessa and once the orders are given to drop them either in Tangalle or Madamulana. Following this revelation the police have also questioned a large number of LTTE cadres who are in custody now, SSC Peiries said.

He also said the investigations had revealed that Madusha Lakshan who had negotiated the deal had allegedly transported a large number of LTTE arms to the South. Mr. Peiries informed court that the suspect could not be questioned as he is in prison and therefore asked that he be handed over to the CCD for interrogation.

Having heard the submission, Additional Magistrate Dharshika Wimalasiri ordered that the suspect Madusha Lakshan be produced in court on August 17 to handover him to the CCD.

By Susitha R. Fernando

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top