sarath.fonseka.2010@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென ஜனாதிபதி முன்னிலையில் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்
sarath.fonseka.2010@gmail.com மின்னஞ்சலை மேற்கோள்காட்டி Lanka News Web இணையத்தளத்தில் இதற்கு முன்னர் பல செய்திகளை வெளியிட்டிருந்தோம். எனினும், இந்த மின்னஞ்சல் முகவரிக்கும் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லையென கூட்டுப் படைகளின் பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரம் முன்னிலையில் தெரிவித்துள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி, இந்த விடயத்தை அறிவிப்பதற்காகவே சரத் பொன்சேகா ஜனாதிபதியைச் சந்திக்க வந்ததாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
தாம் சார்ந்த இந்த பிரசார நடவடிக்கைகள் எதிர்க்கட்சியின் அரசியல்வாதியொருவரின் அனுசரணையுடன் அவரது இணைப்பாளரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தாம் நம்புவதாகவும், அரசியலுக்கு வருவதற்கு தமக்கு எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லையெனவும் சரத் பொன்சேகா இதன்போது தெரிவித்ததாக மேலும் தெரியவருகிறது.
sarath.fonseka.2010@gmail.com மின்னஞ்சல் முகவரியை மேற்கோள்காட்டி எமது இணையத்தளம் உள்ளிட்ட ஜே.வி.பி.யின் "லங்கா" நாளிதழ் மற்றும் வேறு சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட செய்திகளை சரத் பொன்சேகா இதன்போது மறுக்கவில்லையென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்திற்காக ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலரையும் சந்தித்த சரத் பொன்சேகா குறித்த மின்னஞ்சல் முகவரிக்கும் தமக்கும் தொடர்பில்லையென்பதை மாத்திரமே தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமக்கெதிராக அரசாங்கத்தினால் பாரிய சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக அம்பேபுஸ்ஸ நிகழ்வில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின் போது ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்களுடன் நேற்று (22) அம்பேபுஸ்ஸ சிங்க படைப்பிரிவு தலைமையகத்தில் விருந்துபசாரம் ஒன்றில் சரத் பொன்சேகா கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய சரத் பொன்சேகா, தமக்கெதிராக ராஜபக்~ சகோதர்களினால் பாரிய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார். மேலும் அரசாங்கத்தின் ராஜபக்~ சகோதர்களையும், எதிர்க்கட்சிகளையும் சரத் பொன்சேகா வன்மையாக சாடியுள்ளார்.
தமது ஆலோசனைகளை மீறி பாதுகாப்புச் செயலர் வவுனியா முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்த முயற்சிப்பதாகவும், இதனால் பெரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் வெகுவிரைவில், அரசாங்கத்திற்கு தமது சேவை தேவைப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Lanka News Web
0 விமர்சனங்கள்:
Post a Comment