2 மகள்களை கற்பழித்த தந்தை-50 ஆண்டு சிறை
ராணிப்பேட்டை: இரு மகள்களை கற்பழித்த காமுக தந்தைக்கு, ராணிப்பேட்டை விரைவு நீதி மன்றம், 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 2008 அக்டோபர் 25ம் தேதி, வசந்தா வெளியில் சென்ற போது, வீட்டில் இரு மகள்கள் இருந்துள்ளனர்.
வீட்டில் இருந்த சம்பத் பெற்ற மகள்கள் என்றும் பாராமல், காமவெறி தலைக்கு ஏறி கற்பழித்துள்ளார்.
தந்தையின் கொடூர செயல் குறித்து, மகள்கள் இருவரும் தாயிடம் கூறிக் கதறியுள்ளனர். இது குறித்து, அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வசந்தா புகார் அளித்தார்.
இதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட அனைத்து மகளிர் போலீசார் சம்பத்தை கைது செய்தனர். இந்த வழக்கு , ராணிப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி, சம்பத்துக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் (42 ஆண்டுகள்) மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததற்கு மூன்றாண்டு, பெண்களை கொடுமை படுத்தியதற்காக மூன்றாண்டு, பயமுறுத்தியதற்கு இரண்டு ஆண்டு என, மொத்தம் 50 ஆண்டு, தனித்தனியாக கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment