"சனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்!
ஐ.நாவின் நிதிஉதவியுடன் வவுனியாவில் இயங்கும் அகதி முகாம்களில் தங்கியுள்ள வர்களின் மிகப்பரிதாபமான நிலையை எடுத்துக்காட்டும் வீடியோக் காட்சிகளை "சனல் 4" தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியுள்ளது.
ஐ.நாவின் நிதிஉதவியுடன் வவுனியாவில் இயங்கும் அகதி முகாம்களில் தங்கியுள்ள வர்களின் மிகப்பரிதாபமான நிலையை எடுத்துக்காட்டும் வீடியோக் காட்சிகளை "சனல் 4" தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியுள்ளது.
முகாம்களில் மக்கள் வாழ்வை அவலப்படுத்தும் நிலைமைகளை வெளிப்படுத்தும் வீடியோக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
சேற்றுத் தரைகளில் நோயாளர்கள் படுத்துக்கிடக்கும் காட்சியையும் தமது முகத்தில் மொய்க்கும் இலையான்களைக் கலைக்க முடியாத அளவுக்கு உடல் சக்தி இழந்து, சோர்வடைந்த நிலையில் அசையாது கிடக்கும் காட்சிகளையும் அந்தத் தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையத்தில் " வார் வித்தவுட் விற்னஸ்" (War Without Witness) என்ற அமைப்பு கையடக்கத் தொலைபேசி மூலம் எடுத்த படங்களையே தாம் காட்சிப்படுத்தியதாக "சனல் 4" தொலைக்காட்சி தெரிவித்தது.
வவுனியா அகதிகளுக்கு இப்போதே இந்த நிலை என்றால், இந்த மாத இறுதியில் பொழிய ஆரம்பிக்கவுள்ள பருவமழை கொட்டத்தொடங்கியதும் என்ன ஆகப்போகிறதோ, என்ற கவலை, பீதி அங்குள்ள மக்களை இப்போதே ஆட்கொண்டிருப்பதாக வீடியோக் காட்சிகளுக்கு விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment