ஆசிரியை திட்டியதால் 5ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
ஆசிரியை திட்டியதால் 5-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோழவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோழவரம் நேரு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (எ) ஞானபிரகாஷ். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரதீஷ் (10). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலாண்டு தேர்வு தொடங்கியது. தமிழ் தேர்வு நடந்தது. தேர்வு முடிந்ததும் விடைதாள்களை ஒவ்வொரு மாணவரும் கொடுத்துக் கொண்டிருந்தனர். பிரகாஷ§ம் தனது விடைத்தாளை கொடுத்தான். சரியாக விடை எழுத வில்லை என்று ஆசிரியை அவனை திட்டினாராம். இதனால் மனம் உடைந்து போனான் பிரகாஷ். வீட்டுக்கு சென்றதும், தாய் மேரி லதாவிடம் இச்சம்பவத்தை கூறி அழுதான். அவனை சமாதானப்படுத்திவிட்டு தாய் மேரி லதா கடைக்கு சென்றார்.
இந்நிலையில் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்கு சென்றான் பிரகாஷ். அங்கு உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். தீ மளமளவென பரவியதில் அலறி துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். தாயாரும் கதறியபடி ஓடிவந்தார். தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பிரகாஷ் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ சுப்பிரமணி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரித்து வருகின்றனர். 5-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment