விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறலாம்: சர்வதேச புலனாய்வு இணையத்தளம் எதிர்வுகூறல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் மீண்டும் புத்துயிர் பெறலாம் என்று "Strategy Page" என்கிற பிரபல சர்வதேச புலனாய்வு இணையத்தளம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைப் படையினருடனான இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்கள் தமது இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பார்கள் என்றும், இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இவை தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
இலங்கை இராணுவத்துடனான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சுமார் 30 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஆயுதமற்ற புலிகள் ஆவர்.
ஆனால், மிகவும் ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்குபவர்கள். அவர்கள் தற்போது புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு முயற்சித்து வருகின்றார்கள்.
எனினும் இலங்கை இராணுவம் இவர்களைப் பிடிப்பதற்கு வலை விரித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment