தன்குஞ்சை காப்பாற்ற பிறர்குஞ்சை அழித்தவன்..
பால்மணம் மாறாத குஞ்சுகளை வளர்த்தெடுத்து
பாடபுத்தகம் சுமந்து கொண்டு போகும்
பருவத்தில் வெடிகுண்டுகளை கோர்த்து
பச்சை குழந்தைகளின் முதுகில்
பாரங்களாக சுமக்க செய்தவன் நீ…
பள்ளி மாணவர்களை அரக்கன் நீ
பளுமரங்களில் ஏற்றி கொண்டாடி
பகுத்தறிவு அற்ற சமுதாயமொன்றை
பாரினில் தந்தவன் நீ…
பத்தினிகள் பெற்றெடுத்த
பத்திரமாத்து தங்கங்களை
பாவம் செய்ய கற்றுக் கொடுத்து
பற்கள் காட்டி வாழ்ந்தவன் நீ….
பண்புகள் நிறைந்த குஞ்சுகளை
பழியுணர்ச்சி உடலில்ஏறிடும்
பாவிகளாக மாத்திரைகள் விழுங்கவைத்து
பருந்துகள் போல் பறக்க வைத்தவன் நீ….
பத்திரமாக புலம்பெயர் மக்கள் புலம்பிட
படுக்கையறையில் தன்பிள்ளை சுகமாதவழ்ந்திட
பறவைகள் போல் ஆங்காங்கே அலையவைத்து
பாத்திரம் ஏந்த வைத்தவன் நீ….
பந்தய குதிரைகளை ஓடவைத்து
பணங்கொடுத்து பார்த்து மகிழ்ந்து
பரிவு இன்றி தற்கொலை படைகளாக அனுப்பி
பரிகாசம் செய்தவன் நீ…
பணிகள் கரத்தில் ஆயிரம் காத்து கிடக்க
பள்ளங்களின் ஆழமறியாமல்
பாலம்கட்ட ஆசைப்பட்டவர்களை
பல்லை இழித்து வசைபாடியவன் நீ..
பங்குகள் ஆயிரம் ஆயிரம் போட்டு
பலவிலையில் விற்று வயிற்றோடு
பருமனாக உடல் வளர்த்து
பசியாற அமர்ந்து உண்டவன் நீ..
பச்சோந்தி உனக்காக அன்று
பறித்த உயிர்கள் ஏராளம்
பயன்இன்றி மக்கள் மீது
பாவங்களை எறிந்தவன் நீ..
பண்பான மக்களிடம் அன்று
பல கறைகளை வாரி இறைத்தவன்
பறை சாற்றுவோம் உலகிற்க்கு உனது
பாடலை…..
பால்மணம் மாறாத குஞ்சுகள்
பிரபாகரன் வளர்த்து கொன்ற பிஞ்சுகள்..!!!!
கிளியின் ஒர்கிராமத்து நாயகன்.. வவிதரன்
அடிரடி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment