ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்
ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறு வனின் தந்தை மரணம் அடைந்தார்.
பிரபல ஹாலிவுட் டைரக்டர் டேனிபாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திர மாக அசாருதீன் நடித்து இருந்தான். இவன் மும்பை தாராவியில் உள்ள குடிசை பகுதியில் தங்கியிருந்தான்.
ஆக்கிரமிப்பில் குடியிருப்பதாக கூறி அவனது குடிசையை மும்பை மாநகராட்சி இடித்தது. எனவே தங்க வீடு இன்றி இருந்த அவனுக்கு டேனி பாயலின் ஜங்கோ டிரஸ்ட் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டது.
அந்த வீட்டில் அவன் கடந்த சில நாட்களாக குடியிருந்து வந்தான். இந்த நிலையில் அவனது தந்தை முகமது இஸ்மாயில் காச நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment