எமலோகத்தில் பூலோகம் கடந்த தமிழீழப் பிரகடனமும் பத்திரிகையாளர் மகாநாடும்
வன்னியில் தமிழீழ அரசாங்கம் நடத்திய அனைவரும் எமலோகத்தில் கூடியிருந்தனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு எமலோகத்தில் ஒரு தமிழீழ அரசாங்கத்தை நடத்துவதற்கு எந்தவித பிரச்சனையும் இருக்கவில்லை. அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் கூட எமலோகத்தில் இருந்தார்.
தியாக தீபம் திலீபன் பெரு மகிழ்ச்சியில் இருந்தார். நீ முன்னாலை போ நான் பின்னாலை
வாறன் என்று சொல்லி தன்னை எமலோகம் அனுப்பிய என்னுடைய ஈகைப் பெருந்தலைவன் எமலோகத்திற்கு வந்து தான் கொடுத்த வாக்கைக் காப்பற்றியுள்ளான். எமலோகத்தில் தலைமை இல்லாமல் தவித்த என்னுடைய குறையைப் போக்கியுள்ளார். அதே போல கரும்புலிகள் உட்பட மாவீரர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். நீங்கள் பேங்கோடா நானும் பின்னாலை வருவன் என்று தங்களுடன் குறூப் போட்டோ எடுத்து வழியனுப்பிய
தலைவன் தாங்கள் எதிhபாராத விதத்தில் மிக விரைவாக தங்களுடன் எமலோகத்தில் இணைந்ததையிட்டு பெருமையடைந்தனர். எமலோகத்தில் தன்னுடைய உறுப்பினர்களுடன் இணைந்து கொண்ட பிரபாகரனை உடனடியாக பத்திரிகையாளர்களையும் அரசியல்வாதிகளையும் அழைத்து மாநாடு ஒன்றை நடத்தி தமிழீழப் பிரகடனத்தைச் செய்யும்படி தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் ஆலோசனை வழங்கினார். இல்லாவிட்டால் இங்குள்ள மாற்றியக்கத் தலைவர்களுக்கு நாங்கள் கட்டுப்படவேண்டிய நிலைமை ஏற்படும். .
இங்கு ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், ஒபரோய்த் தேவன், ஜெகன்
மாணிக்கதாசன், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று எங்களால் எமலோகம் அனுப்பப்பட்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எமலோகத்தில் அவர்களுக்குக் கீழ் இயங்கமுடியாது. அதனால் உடனடியாக பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி நீங்கள்தான் எமலோகத் தேசியத்தலைவர் என்பதை பகிரங்கமாக அறிவித்து விடுங்கள் என்ற பாலசிங்கத்தின் ஆலோசனையை ஏற்று உடனடியாக எமலோகத்தில் பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டது.
புலிகளால் எமலோகம் அனுப்பப்பட்ட பல பத்திரிகையாளர்கள் அங்கு இருந்தமையால் பிரபாகரனுக்கு அந்த மாநாட்டைக் கூட்ட பெரிய சிக்கல் எதுவும்இருக்கவில்லை.
மாநாடு ஆரமபமானது. பாரிய பாதுகாப்புப் பரிசோதனைகளின் பின் மாநாடு ஆரம்பமானது. வன்னியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு அருகில் இருந்தவர்களில் கருணாவைத் தவிர மற்ற அனைவரும் இருந்தனர். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மெய்ப்பாதுகாவலன் கடாபி அருகில் நின்றிருந்தார். அரசியல்ப் பொறுப்பாளர் சூனா. பானா தமிழ்ச்செல்வன் வழக்கமான சிரிப்புடன் அருகில் வீற்றிருந்தார். பிரபாகரனால் எமலோகம் அனுப்ப்பட்ட அரசியல் தலைவர்கள் பலரும் மாட்டில் கலந்து கொள்ள உத்தரவிடப்
பட்டிருந்தது. ராஜீவ் காந்தி, பிரேமதாசா ஆகியோர் கூட மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்கள்.
மாநாடு ஆரம்பமானது அன்ரன் பாலசிங்கம் தனது வழமையான ஜொனிவோக்கர் செருமலுடன் பேசத் தொடங்கினார்.
அன்பார்ந்த எமலோகத் தமிழீழ மக்களே நாங்கள் எமலோகத்தில் இந்தத்திடீர்ப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டியதன் காரணம் நாங்கள் பூலோகம் கடந்த தமிழீழத்தை எமலோகத்தில் பிரகடனம் செய்யவுள்ளோம். அது மட்டுமலாது பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் எமது எமலோகத் தேசியத் தலைவரிடம் கேள்விகளைக் கேட்கலாம். தத்துவார்த்தமான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்வேன், ஏனைய கேள்விகளுக்கு எமது எமலோகத் தேசியத் தலைவர் மிஸ்டர் பிரபாகரன் பதில் சொல்வார். நீங்கள்
கேள்விகளை ஆரம்பிக்கலாம்.
ஈழநாடு பத்திரிகையாளர் சண்முகலிங்கம் எழுந்தார். நீங்கள் என்னைக் கடத்திக் கொண்டுபோய்க் கொலை செய்தீர்கள். என்னுடைய உடலையாவது எனது மனைவிபிள்ளைகளிடம் ஒப்படைத்திருக்கலாம். அவர்கள் காடாத்தி அந்தியேட்டி. திவசமாவது செய்திருப்பார்கள்.
பாலசிங்கம் ஆவேசத்துடன் குறுக்கிட்டு இஞ்ச வாரும் எங்கடை தலைவருக்கே பூலோகத்திலை அந்திரட்டி செய்யுறதோ இல்லையோ எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கினம்.அந்திரட்டி செய்யாமல் உம்மைப் போலை ஆயிரக்கணக்கிலை பூலோகத்தலை இருக்கினம். உமக்கு எமலோகம் வந்தும் கொழுப்பு அடங்கேல்லை. இஞ்சையும் காணாமல் போகப்போறீர்;. பொத்திக் கொண்டு உதிலை இரும்.
இந்தப் பதிலை எதிர் பார்க்காத சண்முகலிங்கம் நடுங்கியபடிஆசனத்தில் அமர்கிறார்.
கேள்வி கேட்பதற்காக கை உயர்த்திய ஒருவரைப் பார்த்து நீர் கேளும்
என்று பாலசிங்கம் கைவிரலைக் காட்டுகிறார். அவாதான் பிரேமதாசா
ஆய் புவன்
மம துன்ன சல்லி.
மம துன்ன ஆயுத,
மம விஸ்வாச கலா ஓபவ,
நமுத் ஒப மாவ மறுவா
இவர் சொல்லிறது எனக்கு விளங்கேல்லை. இங்கை யாராவது இவர் சொன்
னதை ட்றான்ஸ்லேற் பண்ணுங்கோ
நான் உங்களுக்கு சல்லி தந்தது.
நான் உங்களுக்கு ஆயுதம் தந்தது.
நான் உங்களை எவ்வளவு நம்பினேன்.
நீங்கள் என்னை ஏமாத்திப் போட்டீங்க
இவ்வாறு தமிழ்த் தெரிந்த சிங்களவர் ஒருவர் பொழி பெயர்த்தார்.
அண்ணை உவன் ஆயுதம், காசு தந்தது சரி ஆனா சல்லி சீமந்து எப்ப தந்தவன். என்று பிரபாகரன் பாலசிங்கத்தின் காதுக்குள் குசுகுசுக்க சல்லி எண்டிறது காசைத்தான் தலைவர் சொல்லுறது. நான் கொழும்பிலை கொஞ்ச நாள் ஜேணலிஸ்ற்றா இருந்தனான் எனக்குத் தெரியும்.சரி உவன் கேட்டதுக்கு பதிலைச் சொல்லுங்கோ.
நாங்கள் யாரையும் ஏமாத்திறதில்லை. அவையள்தான் எங்களிட்டை ஏமாறுகிறவை. பிரேமதாசாவின்ரை கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. என்று பிரபாகரன் பதில் சொன்னார்.
பிரேமதாசா சிரிக்கிறார்.
மிஸ்டர் பிரபாகரன் சேய் வீ நெவர் சீற் எனிபொடி. பீப்பிள் சீற் தெம்செல்வ்.
வீ ஆர் நொட் றெஸ்பொன்சிபிள் போர் பிரேமதாசா கில்லிங்.
சரி நீங்கள் சொல்லுங்கோ ராஜீவ் காந்தியைப் பார்த்து பாலசிங்கம்
விரல் நீட்டுகிறார்.
ஐ ஆம் ராஜீவ் காந்தி.
மை மதர் வோஸ் ஹெல்ப்பிங் யூ.
ஐ வோஸ் ஹெல்ப்பிங் யூ.
இவ் ஐ கேம் ரு த பவர் எகெய்ன் ரமில்ஸ் புறொப்லம் வில் பி
சோல்வ்ட்.
பட் யூ அசாசினேற்றட் மீ.
தற்ஸ்வை ஐ ஆம் ஹியர் அன்ட் யூ ஆர் ஹியர்.
அதர்வைஸ் யூ வில் பிகம் சீவ் மினிஸ்டர் போர் நோத் ஈஸ்ற்.
வை டிட் யூ கில் மீ.
ராஜீவ் காந்தி என்னண்ணை சொல்லிறான்
என்ன சொல்லிறானெண்டால் தலைவர் தன்ரை தாய் எங்களுக்கு உதவி செய்தவாவாம். தான் உதவி செய்தவனாம். தான் திரும்பவும் பதவிக்கு வந்திருந்தா தமிழற்றை பிரச்சனை தீர்ந்து வடக்கு கிழக்குக்கு நிங்கள் முதலமைச்சரா வந்திருப்பியளாம். ஆனால் நீங்கள் என்னைக் கொலை செய்து போட்டியளாம். அதாலைதான் தானும் நீங்களும் எமலோகத்திலை இருக்கிறமாம். அறுவாங்கள் இங்கை வந்தும் பழசையெல்லாம் தோண்டிறாங்கள் இதுக்கு நீங்கள் கவனமாப் பதில் சொல்லவேணும். இதுக்கு பூலோகத்திலை நடந்த பத்திரிகையாளர் மாநாட்டிலை சொன்ன மாதிரி அது ஒரு துன்பியல் சம்பவம் எண்டுதான் பதில் சொல்லவேணும்.
பிரபாகரன் செருமிக் கொண்டு அஅஅஅஅ அது ஒரு துன்பியல் சம்பவம்.
மிஸ்டர் பிரபாகரன் சேய் இற் வோஸ் ஏ ட்ராஜெடி.
ராஜீவ் சிரிக்கிறார்.
அடுத்ததாக கை உயர்த்திய ஒருவரைப் பார்த்து பாலசிங்கம் விரலை
நீட்டுகிறார்.
நான் அல்பிரட் துரையப்பா. நான் சிங்களக் கட்சியிலிருந்து யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்தனான். நாற்றம் நிறைந்த யாழ்நகரை ரோமாபுரி போல மாற்றிக் கொண்டிருந்தனான். ஆனால் நீங்கள் என்னைத் துரோகியெண்டு எமலோகம் அனுப்பிப் போட்டு நீங்களும் எமலோகத்துக்குத்தா வந்திருக்கிறியள். என்னைப் போல ஆக்கள் உங்கடை தமிழீழ இலட்சியத்துக்கு தடையாக இருக்கிற துரோகிகள் என்று எமலோகம் அனுப்பினனீங்கள். பிறகெப்படி உங்கடை தமிழீழப் போராட்டம் தோற்றுப் போனது.
வாயை ஒருபக்கமாக கோணிக்கொண்டு பிரபாகரன் பேச ஆரம்பித்தார்.நாங்கள் துரோகியளைப் போட்டுத்தள்ளினது உண்மை. ஆனால் எங்கடை தமிழீழப் போராட்டம் தோற்றம் போகவில்லை. போராட்டம் என்பது தோற்பதுமில்லை வெல்வதுமில்லை. அது தொடரும். இன்று எமது தமிழீழ இலட்சியப் போராட்டம் எமலோகம் வரை தொடர்கிறது. அப்படித் தொடர்வதுதான். போராட்டம்.பதில் சொல்லி விட்டு பிரபாகரன் பாலசிங்கத்தைப் பார்த்து சிரிக்கிறார்.
நான் சென்ற் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா. நான் எனது மாணவர்களை இலங்கை ராணுவத்தோடை கிறிக்கற் விளையாடவிட்டதென்று என்னை எமலோகம் அனுப்பினனீங்கள். அப்பிடி அனுப்பினனீங்கள் பிரேமதாசாவிட்டை ஆயுதங்கள் வாங்கி இலங்கைராணுவத்தோடை சேர்ந்து நிண்டு இந்திய ராணுவத்தோடை சண்டை பிடிச்சனீங்கள். கொழும்பு கில்டன் ஹொட்டலிலை நிண்டு சாப்பிட்டனீங்கள். அப்ப நீங்கள் துரோகிகள் இல்லையோ?
நாங்கள் எந்தப் பேயோடையும் கூட்டுச் சேருவம்.நாங்கள் பிரேமதாசாவோட சேர்ந்தது ஒரு ராஜதந்திரம். சிரித்துக் கொண்டு பிரபாகரன் பதிலளித்தார்.
தயவு செய்து பழசுகளை தோண்டாதைங்கோ. எமலோகமாவது ஒளிமயமாக இருக்க வேணுமெண்டுதான் நாங்கள் இந்த மாநாட்டைக் கூட்டினனாங்கள். பிளீஸ் டோன்ற் டிக் இன் த பாஸ்ற். கேள்வி கேட்க எத்தனித்த இன்னொருவரைப் பார்த்து பாலசிங்கம் விரலை நீட்டுகிறார்.
நான் உங்களால் எமலோகம் அனுப்பட்ட சாதாரண பொதுமகன்; யாழ்ப்பாணத்திலை இரும்புப் பட்டறை வச்சிருந்தனான். வரி கேட்க வந்தவர்களிடம் வன்னியிலை தானே உங்கடை நிர்வாகம் இருக்கு. யாழ்ப்பாணத்திலை இருக்கிற நான் ஏன் உங்களுக்கு வரி கட்டவேணும் எண்டு கேட்டதுக்காக என்னை எமலோகம் அனுப்பி வச்சனீங்கள். இப்ப எமலோகத்திலையும் நாங்கள் வரிகட்டவேணுமோ?
பிரபாகரன் முறைத்தபடி எங்கடை நிர்வாகம் எங்கையெல்லாம் இருக்கோ அங்கை நீங்கள் வரி கட்டித்தான் ஆகவேணும்.
அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
கேள்வி கேட்க முற்பட்ட ஒருவரைப் பார்த்து பாலசிங்கம் விரலை நீட்
டுகிறார். நான் தராக்கி சிவராம். உங்களை நம்பினதாலை நான்
எமலோகம் வரவேண்டி ஏற்பட்டது. ஆனா நீங்கள் எப்படி எமலோகம்
வந்தீர்கள் தேசியத் தலைவர் அவர்களே!.
நான் எனது தளபதியளைத் தான் நம்பியிருந்தனான். சமாதன காலத்திலை
திண்டு கொழுத்த தளபதியளாலை நிண்டு அடிபடேல்லாமல் போச்சு. கரும்
புலியளாலையும் ஏலாமல் போச்சு. வேறை வழியில்லாமல் சனத்தை நூற்றுக்
கணக்கிலை போட்டுத்ள்ளி படங்கள் வீடியோக்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு
காட்டிப்பாத்தன். ஒரு நாடும் திரும்பிப் பாக்கேல்லை. வெளிநாடுகளிலை என்
ரை ஆக்களை வச்ச பஸ்ஸை மறிச்சு, றெயினை மறிச்சு, றோட்டுகளை
பிளக் பண்ணி ஆர்ப்பாட்டம் செய்ய வச்சன். ஒண்டுக்கும் பலனில்லாமல் போச்
சு. ஆமிக்காரனும் மோட்டுத்தனமா அடிக்கத் தொடங்கியிட்டான். என்னைச் சுத்
தி நிண்ட சனங்களும் விட்டிட்டு ஓடியிட்டுதுகள். அமெரிக்கன் ஏதாவது செய்
து சண்டையை நிப்பாட்டுவான் எண்டு பாத்தால் அவனும் கணக்கிலை எடுக்
கேல்லை. சறண்டர் பண்ணிறதைத் தவிர வேறை வழியில்லையெண்டு சறண்
டர் பண்ணினன். ஆனால் சிங்களவன் தலையைப் பிளந்து போட்டான். இதுக்
குப் பிறகு எமலோகம் வராமல் எங்கை போறது.
அடுத்து நீங்கள் பாலசிங்கம் விரல் காட்ட
நான் ஒரு தமிழீழப் பிரியன் உங்களுக்காக உளவு பாத்ததுக்காக மாற்றியக்கம் என்னை எமலோகம் அனுப்பிவிட்டார்கள். உங்களுடைய புலனாய்வுத்துறை இங்கும் இயங்குமா?
எங்கடை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் இங்கு வந்திருப்
பார் எண்டு நினைச்சனான். அவர் என் இன்னும் எமலோகம் வரவில்லை என்று
எனக்கு விளங்கவில்லை. ஆனால் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கை எனக்
கிருக்கிறது. அவர் வந்து சேர்ந்ததும் புலனாய்வுத்துறை எமலோகத்திலும்
இயங்கும்.
தமிழீழ வான்படை எமலோகத்தில் இயங்குமா தலைவா? மாற்று இயக்கத்தை அழித்ததற்காக சோடா உடைத்துக் கொடுத்த தமிழீழப்பிரியன் ஒருவர் கேள்வி கேட்டார்.
நிச்சயம் எங்கடை வான்படை இங்கும் இருக்கும் தற்போது எங்களிடம்
விமானங்கள் இல்லை. இப்போது என்னிடம் புஷ்பக விமானம் மட்டும்தான்
இருக்கிறது. அது எனது தனிப்பட்ட தேவைக்காக வைத்திருக்கிறேன். எமது
சர்வதேசத் தொடர்பாளர் கே.பி இன்னும் எமலோகம் வரவில்லை. அவர் வந்து
சேர்ந்ததும் வேறு லோகங்களுடன் தொடர்பு கொண்டு விமானங்களை கொள்
வனவு செய்வார். எமது வான் படைகள் பலப்படுத்தப்படும்.
தேசியத் தலைவர் அவர்களே எமலோகத்தில் மாவீரர் உரை
நிகழ்த்துவீர்களா? புலிகளின் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி கேட்டார்.
ஆம் வழக்கமாக மறைவான இடத்திலிருந்து மாவீரர் உரையாற்றி அதனை மக்கள் கேட்டார்கள். ஆனால் இம்முறை எமலோகத்தில் மாவீரர்கள் மத்தியிலே நின்று மாவீரர் உரையாற்றப் போகிறேன். என்னை இங்கு பார்த்ததில் மாவீரர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மாநாடு முடிவடைகிறது. கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதென்று ஏற்கனவே மிரட்டப்பட்ட புலிகளால் எமலோகம் அனுப்;பப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,மாணவர்கள், மற்றும் சில பத்திரிகையாளர்கள் அமைதியாக வெளியேறுகின்றனர்.
Eelanaasam
0 விமர்சனங்கள்:
Post a Comment