ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் விடுதலைப் புலிகளும் பங்குதாரர்கள்
விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் பல அரச நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிடம் இருந்து ஸ்ரீலங்கா ரெலிகொம் பங்குகளை மலேசியத் தமிழரான ஆனந்த கிருஷ்ணனின் மெக்சீஸ் நிறுவனம் அதிக விலையில் கொள்வனவு செய்திருந்தது. இந்த கொள்வனவு தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக ஜே.வி.பி. மாத்திரமல்லாது தொழிற்சங்கங்களும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன.
ஆனந்த கிருஷ்ணனின் மெக்சீஸ் நிறுவனம், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் 49 வீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளது. மெக்சீஸ் நிறுவனத்தை ரெலிகொம் பங்குகளை பெறும் கொடுக்கல் வாங்கல்களுக்காக இலங்கைக்கு அழைத்து சென்றவர்கள், ஜனாதிபதிக்கு நெருக்கமான ரொஷான் காரியபெரும மற்றும் பிரியந்த காரியபெரும ஆகிய இருவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறிது காலத்தில் மெக்சீஸ் நிறுவனம் இவர்கள் இருவரையும் நீக்கி விட்டு, அதன் இலங்கை பிரதிநிதியாக திவயின பத்திரிகையின் அரசியல் செய்தியாளர் மனோஜ் அபேவீரவை நியமித்தது. தற்போது மனோஜ் அபேவீரவே மெக்சீஸ் நிறுவனத்திற்கான இலங்கையின் அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். மெக்சீஸ் தொலைபேசி நிறுவனம் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு சொந்தக்காராக இருக்கும் யாழ்ப்பாணத்தை பூர்கமாக கொண்ட ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் செல்வந்தர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment