ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை நவீன பிரபாகரன் என்று கூறிய இந்த ஈரோஸ் தலைவர்(?) பிரபாகரன் யார்..??
மீண்டும் ஒரு நவயுக பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. இவரது தலைமையிலான ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் செய்யும் கடத்தல்கள்இ கொலைகள்இ கொள்ளைகள் கட்டுக்கடங்காதவை. அதேபோன்று புளொட் அமைப்பினர் வவுனியாவில் செய்யும் கடத்தல்கள், கொலைகளும் கட்டுக்கடங்காதவை. இந்த அமைப்புக்கள் இரண்டுமே அராஜக ஆயுதக்குழுக்களாகும்.
புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டு இயங்குபவர்களே. ஆனால் நாம் தனித்தே இயங்குபவர்கள். நாம் வெளிநாட்டில் செய்துள்ள சில முதலீடுகளால் பெறும் நிதிகள் மற்றும் சுயதொழில் மூலமும் பெறும் பணத்தினைக் கொண்டும்இ வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்கள் அனுப்பும் பணம் என்பவற்றின் ஊடாகவுமே எமது அமைப்பினை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஈரோஸ் அமைப்பின் தலைவரெனக் கூறிக் கொள்ளும் பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். (இதேவேளை ஈரோஸ் தலைவர் அமரர் சங்கர்ராஐன் மகனான லண்டனில் உள்ள நேசன் என்வரும் தானே ஈரோஸ் தலைவரென உரிமை கோருவது தனிக்கதை.)
மேற்படி ஈரோஸ்பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் பேட்டிக்காக ஊடகங்களின் பின்னால் கேட்டலைவதொன்றும் புதிய விடயமல்ல. ஊடகங்களுக்கு உதவிகளைப் புரிவது போன்று நடித்துக் கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல பல மாங்காய்களை அடிக்க முயலும் இவரை ஊடகங்கள் விரைவில் புரிந்து கொள்ளும். ஈரோஸ் பிரபா தனது பேட்டியில் தாம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்பது போலவும், தமது வெட்கக்கேடான தேர்தல் தோல்விகளை இன்னுமே ஒப்புக்கொள்ள முடியாத மனநிலையிலும் இருப்பதையே அவர் வெளியிட்டுள்ள பேட்டி எடுத்துக் காட்டுகின்றது.
அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாநகரசபையில் போடப்படாத 6ஆயிரம் வாக்குகள் ஈரோஸ் அமைப்பின் வாக்குகளே. அதனையும் புளொட் அமைப்பினரே தடுத்தனர். நாம் புலிகள் எனக் கூறியே அதனைப் புளொட் அமைப்பினர் தடுத்தார்கள். அந்த வாக்குகள் போடப்பட்டிருந்தால் நாம் வவுனியா மாநகரசபையைக் கைப்பற்றியிருப்போம். வவுனியா தமது கோட்டை எனக்கூறும் புளொட் அமைப்பு அங்கு போடப்பட்ட 22ஆயிரம் வாக்குகளில் 4ஆயிரம் வாக்குகளையே பெற்றிருந்தது. இதிலிருந்தே இவர்களது நிலைமை புரிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். (வவுனியாவில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் புளொட் அமைப்பினர் என்பதை இவர் குறிப்பிட மறந்து விட்டார்.)
அத்துடன் யாழ்ப்பாணத்தில் குருநகர்இ பாசையூர் போன்ற பகுதிகளில் ஈ.பி.டி.பியினர் மக்களை வாக்களிக்க விடாது பகிரங்கமாகவே தடுத்தனர். இதன் காரணமாகவே யாழ். நகரிலும் ஈரோஸ் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முழுக்காரணமும் ஈ.பி.டி.பியினரே. ஈ.பி.டி.பிக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் எமக்கு எழுத்துமூலமாக ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இதுவரையில் 242 குற்றச்சாட்டுக்கள் முழு ஆதாரங்களுடன் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுக்களாக எமக்குக் கிடைக்கப்பெற்ற கடத்தல்இ கப்பம்பெறுதல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவரே தற்போது யாழ். மாநகரசபையின் பதில் மேயராக பொறுப்பெடுக்கவுள்ள றேகன் என்பவராவார் எனவும் பிரபா தனது பேட்டியில் கூறியுள்ளார். (ஈபிடிபி குறித்து ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நீதிமன்றத்தையோ மனிதஉரிமைகள் அமைப்புக்களையோ ஏன் இதுவரை இவர் நாடவில்லை? என்பதும் எமக்குப் புரியாத புதிர் தான்.)
அத்துடன் அவர் தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தில் தமது வண்டவாளங்களை வெளிக்கொணர்ந்த ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஊடகங்கள் சிலவற்றைப் பற்றி அவர் பேட்டியளிக்கையில்இ அதிரடி இணையம் உள்ளிட்ட சில இணையங்கள் எமக்கெதிரான சில பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனினும் அவை தொடர்பில் ஊடகங்களிலோஇ பொலீஸ் நிலையத்திலோ பதிவுகள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்ல இவர் ஊடகவியலாளரின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் புளொட் மற்றும் ஈ.பி.டி.பியையும் தாக்கிப் பேசுவதையே தனது பதிலில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். (யாரைப்பற்றியாவது அன்றில் எந்தவொரு செய்திகளையும் ஊடகங்கள் வெளியிடும் போது அவை தவறென்றால் முதலில் அதனை நாகரீகமான முறையில் அவ்வூடகங்களுக்கே மறுப்புத் தெரிவிக்க வேண்டும் இரண்டாவதாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டு புலம்பித் திரிவது எந்தவகையில் நியாயம்??)
முன்னர் இந்த ஈரோஸ் பிரபா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த காலகட்டத்தில் தமது அமைப்பின் அலுவலகத்தில் புலி உறுப்பினர்களை மறைத்து வைத்திருந்த காரணத்தினால் இராணுவத்தினர் அந்த அலுவலகத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது இவர் தனது ஒரு கையையும் தனது மகனாரையும் இழந்திருந்தார். இதனைத் தொடர்ந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுவிஸ் அரசின் உதவியுடன் சுவிஸ் தூதரகத்தின் அனுசரணையுடன் இவர் தனது மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சுவிஸ்லாந்திற்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.
இவர் சுவிஸில் இருந்த காலகட்டத்தில் சுவிஸ் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஏற்பட்ட தொடர்புகளினால் ஏற்பட்ட அதீத நட்பு காரணமாக மீண்டும் ஈரோஸ் அமைப்பைக் கட்டியெழுப்புவது என்று கூறிக்கொண்டு தனது மனைவி பிள்ளைகளை சுவிஸ் சோஷியல் பணத்தில் (கூப்பனில்) அங்கேயே தங்க வைத்து விட்டுஇ மீண்டும் இலங்கை வந்து விட்டார்.
தற்போதுகூட இவர் சுவீசிலுள்ள வவுனியாவைச் சேர்ந்த குடும்பமொன்றின் 70வயதுக்கு மேற்பட்ட வயோதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் பலவந்தமாக கையொப்பம் பெற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தின் வவுனியா வீட்டைப் பலவந்தமாகப் பறித்து அந்த வீட்டில் அலுவலகம் அமைத்துள்ளார். இதுபற்றி புளொட் அமைப்புக்கு எழுத்துமூலமான முறைப்பாடும் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து சுவிஸில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ இவர் மழுப்பலான பதிலையே வழங்கி வந்துள்ளார். இதன் காரணத்தினால், இவர் எப்போது சுவிஸ் வருவார்இ இவருக்கு 'நல்லபதிலை' வழங்க வேண்டுமென்று குறித்த வயோதிபரின் உறவினர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் பகிரங்கத்திற்கு வரவேண்டிய விடயமாகும்..
இலங்கைக்கு வருமுன் இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டு அவர்மூலம் ஏனைய தலைவர்களையும் சந்தித்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தான் சுகபோகமாக வாழலாம் என்ற மிகப்பெரும் கனவுடன்இ தனது மனைவியையும் பிள்ளைகளையும் சுவிஸ்லாந்தின் சோஷல் (உதவிப்) பணத்தில் வாழட்டும் என நட்டாற்றில் தவிக்க விட்டுவிட்டுஇ மீண்டும் இலங்கை சென்ற இவர். பெற்ற உதவிகளையும் உதவிகளைப் புரிந்த தலைவர்களையும் மறப்பதற்கு நீண்டநாட்கள் செல்லவில்லை. தனது குடும்பத்தை நட்டாற்றில் விட்ட இவர் தனது குடும்பத்தையே காப்பாற்ற முடியாத நிலையில் எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார் என்பது புரியவில்லை.
இவர் சுவிஸில் இருந்த காலகட்டத்தில் இவரது உயிர் நண்பராக இருந்த முஸ்லிம் அன்பரொருவரின் சிறு குழந்தையைக் கடத்திச் சென்று காசு பறிக்க முயன்ற குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டு தற்போதும் பொலீஸ், நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அதேபோன்று இவர் சுவிஸ்லாந்தின் சூரிச் சிவப்புவிளக்குப் பகுதியான லங்ஸ்ராசா என்னுமிடத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல்யமான இரவு விடுதியை அமைத்து செயற்பட்டு வந்தவர். பின்னர் இவருடன் அதில் இணைந்து செயற்பட்ட நண்பர் ஒருவரை ஏமாற்றி பணம் சொத்து உள்ளிட்ட அனைத்தையும் இவர் சுருட்டிக்கொண்டு இரவு விடுதியையும் மூடிவிட்டு சென்றார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்தப் பிரபா மீது நிறையவே உள்ளன.
இவர்கள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாமிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்களை விடுவித்தமையும் ஆதாரபூர்வமாக பொலீஸ் நிலையத்தில் இருந்து கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது. அந்த ஆதாரபூர்வமான தகவல்களை பெயர் விபரங்களுடன் வெளியிடவும் தயார்நிலையில் உள்ளோம். எனினும் இதனால் பொதுமக்கள் சிலர் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாதென்பதற்காக அது தவிர்க்கப்பட்டுள்ளது. இவர் அரசுடன் சேராமலா வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்? இவரது தேர்தல் பணிகளுக்கு யார் பணம் வழங்கியது? இவரை நாட்டுக்கு அழைத்தவர் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே. டக்ளஸ் தேவானந்தாவின் உதவியிலேயே நாட்டுக்கு வந்து அவரின் உதவியிலேயே தமது அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு தற்போது டக்ளஸ் தேவானந்தாவையே தாக்கி வருகின்றார்.
எது எவ்வாறாயினும் ஈரோஸ் பிரபாவுடன் சேர்ந்து கூட்டுஅரசியல் நடத்தலாம் என எதிர்பார்த்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவருடைய பின்புலம் பற்றி அறிந்து கொண்ட போது இவரைக் கைநழுவ விட்டுவிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவாகற்தாவின் முதுகில் சவாரி செய்யச் சென்றிருந்த ஈரோஸ் பிரபா அமைச்சர் டக்ளசினால் கைவிடப்பட்ட நிலையில் புளொட் அமைப்பின் கதவுகளைத் தட்டினார். அவர்களும் கதவுகளை இறுக்கி மூடிய போது இந்திய றோவிடம் ஒட்டிக் கொண்டார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல்கள் இடம்பெற்ற போது இந்திய றோவின் உதவியுடன் தேர்தலில் குதித்தவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (அரசுக்கு) எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆசனமொன்றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்ட போது குறுகியகால இடைவெளியில் இவருடைய சுயரூபத்தை அறிந்து கொண்ட மக்கள் இவரைத் தூக்கி எறிந்தனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரசுடன் இணைந்து கொண்டு வவுனியா உள்ளுராட்சி மன்றம் மற்றம் யாழ் தேர்தல்களில் பங்கு கொண்டு மண்கவ்வினார். தற்போது இவர்களுக்கு மக்களிடம் உள்ள ஆதரவை அறிந்து கொண்ட அரசு இவர்களை எட்டத் துரத்தஉள்ள நிலையில் அரசு போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் அவமானம் ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
திரு.துரியோதனன் -யாழ்ப்பாணம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment