விஸா இன்றி தமிழ்ப்பெண் லண்டனுக்கு அனுப்பியது தொடர்பாக பிரிட்டன் தூதரகம் விளக்கம்
கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் முறையான விஸா இன்றி தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
அந்தப் பெண் பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரஜாவுரிமை வழக்கு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பானதால் அவரை பிரித்தானிய அரசே தனது செலவில் லண்டனுக்கு அழைத்துச் சென்றது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கையற்கண்ணி கிருஷ்ணபிள்ளை (40 வயது) பெண்மணியே இவ்வாறு லண்டனுக்கு பிரிட்டன் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் அனுப்பப்பட்டிருந்தார். குடிவரவுச் சட்டங்களின் பிரகாரம் அவர் லண்டனில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
எனினும் அதனை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் அப்பெண் தாக்கல் செய்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண் விடயத்தில் பிரிட்டன் எல்லை முகவர் அமைப்பு உதவவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அரச செலவில் லண்டன் திரும்ப வேண்டும் என பிரித்தானிய எல்லை முகவர் அமைப்பு அறிவித்ததுடன், அதற்கான உதவிகளை கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரி மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இத்தகைய சூழ்நிலையிலேயே அவருக்கு விஸா இன்றி லண்டன் அனுப்பப்பட்டிருந்தார். என்று இது தொடர்பாக கொழும்பிலுள்ள தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment