புலிகளை பகிரங்கமாகவே விமர்சிக்கும் பொதுமக்கள்!
பலாத்கார பிள்ளை பிடிக்கு பிள்ளையை பறிகொடுத்து வன்னிமோதலில் தனயனை இழந்த தாயின் கண்ணீர் கவிதை!
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்றும், தமிழ் மக்களை காக்கவந்த பாதுகாவலர்கள் என்று காட்டாட்சி நடாத்திவந்த புலிகள் தமிழினத்திற்கு செய்த கொடுமைகள் மெல்ல மெல்ல பத்திரிகைகள், வானொலிகள் வாயிலாக வெளிவர தொடங்கியுள்ளன. புலிகளின் பாலத்கார ஆட்சேர்ப்பு, பணப்பறிப்பு, பிணை, கப்பம் என்று மக்களை வன்னிக்குள் துன்புறுத்திய புலிகளின் அநியாயங்கள் புலிகளின் அழிவிற்கு பின்னர் வெளியேவர தொடங்கிவிட்டது.
புலிகளின் பலாத்கார பிள்ளை பிடிக்கு அஞ்சி பிள்ளைகளை மறைத்தும், சிறு வயதிலேயே அவர்களுக்கு திருமணங்களை செய்து கொடுத்தும் புலிகளின் பிள்ளை பிடியில் இருந்து காப்பாற்றுவதற்கு பெற்றோர் பட்ட அவஸ்தை எண்ணிலடங்காதவை. அவ்வாறு தமது பிள்ளைகளை பாதுகாத்தபோதும் வீடுகளுக்குள் அத்துமீறி நுளைந்த புலிகள் சிறுவர், சிறுமிகளை கைது செய்து கொண்டுசென்று பலாத்கார பயிற்சி கொடுத்து யுத்தமுனையில் அவர்களை பலிகொடுத்துவிட்டு தாம் மட்டும் இன்று நிவாரண முகாம்களுக்குள்ளும், அரச பாதுகாப்பில் வாழுவதுடன், தமது மனைவி. பிள்ளைகளையும் பாதுகாப்பாக கொண்டுவந்து கல்வியறிவையும் போதித்து வருகின்றனர்.
புலிகளின் பிள்ளை பிடிப்பினால் எத்தனை ஆயிரம் சிறார்களின் கல்வி சீரழிக்கப்பட்டு அவர்களது உயிர்களும் அநியாயமாக காவுகொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேதனையால் மன உளர்ச்சிக்கு உள்ளான பெற்றோரின் இன்றை நிலை மிகவும் மோசமாகவே காணப்படுகின்றது. புலிகளின் அடிமை விலங்கில் சிக்குண்டு தாம் அனுபவித்த வேதனைகள், துன்பங்களை மக்கள் வெளியிட தொடங்கியுள்ளர் என்பதை காண்பிப்பதாகவே பின்வரும் நினைவஞ்சலி ஒன்று வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment