அமைச்சர் மிலிந்தகொட வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுவருகிறார்
அமெரிக்காவிலுள்ள இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரத்னத்தை அச்சுறுத்தி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை கப்பமாகப் பெற்றுள்ளதாக Lanka News Web இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர் ராஜ் ராஜரத்னம் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியிருப்பது குறித்த தகவல்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதாகவும், இதனை வெளியிடாதிருக்க பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே இந்தக் கப்பம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கப்பப் பணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோரினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
தற்போது மிலிந்த மொரகொடவும், பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை வர்த்தகர்களிடம் கப்பம் கோரி வருவதாகத் தெரியவருகிறது.
குறித்த வர்த்தகர்கள், விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றத் தகவல்கள் இருப்பதாகக் கூறியுள்ளதுடன் அவற்றைப் பகிரங்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பணம் தரவேண்டுமெனவும் அழுத்தங்களைக் கொடுத்து கப்பம் பெற்றுவருகின்றனர்.
இவ்வாறு அச்சுறுத்தப்படும் வெளிநாடுகளில் இருக்கின்ற பல இலங்கை வர்த்தகர்கள் கறுப்புப் பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment