சயனைட் வில்லைகளை பிள்ளைகளின் கழுத்தில் தொங்க விடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து தேசத்தைக் கட்டி எழுப்புவோம் -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
சயனைட் வில்லைகளை பிள்ளைகளின் கழுத்தில் தொங்க விடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து தாய் நாட்டுக்குத் துரோகம் விளைவிக்காமல் ஒரே கொடியின் கீழ் அழகிய தேசத்தைக் கட்டி எழுப்புவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாகரையில் இன்று அழைப்பு விடுத்தார்.
மட்டக்களப்பு வாகரை மகா வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தை இன்று காலை (22) திறந்து வைத்து உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் அழிவுற்ற வாகரை மகா வித்தியாலயத்தில்; புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்.
முப்பது வருட காலமாக அபிவிருத்தி எதுவும் மேற்கொள்ளப்படாத கிழக்கு மாகாணத்தில் தற்போது புரட்சிகரமான வகையில் அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. பாடசாலைகள், நெடுஞ்சாலைகள், மின்விநியோகம், சுகாதாரம், போக்குவரத்து என பல துறைகளிலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்வி மட்டும் இருந்தால் போதாது நற்குணம் நற்பண்பு மனிதாபிமானம் போன்றவையும் அவசியமானதாகும்.அன்பின் குழந்தைச் செல்வங்களே இந்தத் தாய் நாட்டை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். அதற்கான உங்கள் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுங்கள். அறிவுபூர்மாக செயல்பட்டு நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் பாதுகாப்பும் சுதந்திரமும் கொண்ட ஒரு சூழலை உருவாக்குவோம் என ஜனாதிபதி மேலும் கூறினார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்களுடன் பெரும் திரளானவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment