மறைந்த பிரபாகரனின் சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
மறைந்த பிரபாகரனுக்கு பாதுகாப்பு வழங்கிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ரகு என்ற தேவகுமாரன் வவுனியா இடைதங்கல் முகாமில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
32வயதான தேவகுமாரன் எனும் ரகு பிரபாகரனின் சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் கையாள்வதில் விஷேட பயிற்சிபெற்ற இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக இவர் செயற்பட்டதாகவும் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் விஷேட நிபுணத்துவம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனின் பல்வேறு இரகசிய திட்டங்களை ரகு நன்கு அறிந்து வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பாக ரகுவிடமிருந்து பல முக்கிய தகவல்களை பெறமுடியும் எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment