சி.என்.என்., அல் ஜசீரா, பி.பி.சி. ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுள்ளனர்
சனல் 4 தொலைக்காட்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சீ.என்.என்., பி.பி. சி. மற்றும் அல் ஜசீரா ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுள்ளமை இன்று வெளியாகி இருக்கின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று சபையில் தெவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட ""சனல் 4'' தொலைக்காட்சி விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில், ""சனல் 4'' வீடியோ காட்சி தொடர்பிலான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்திருக்கும் அந்தத் தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட காட்சிகள் உண்மையற்றதும் போலித் தயாரிப்புகளால் ஆனதுமாகும்.
பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரை தடுப்பதற்கும் அதன் மூலம் பிரபாகரனை பாதுகாப்பதற்கும் சர்வதேசம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
தற்போது பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதியான போலித் தயாரிப்புகளை வெளிப்படுத்தி அரசுக்கு களங்கத்தை விளைவிக்க முற்பட்டிருக்கின்றது. இது உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபித்துக் காட்டிய பின்னரும் அதன் பொறுப்பை குறித்த நிறுவனம் ஏற்க மறுக்கின்றது.
குறித்த வீடியோ காட்சி ""சனல் 4'' நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றதாலேயே ஒளிபரப்பியதாக அந்த நிறுவனம் கூறுகின்றது. ஆனால், அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்ற தகவலை வெளியிட மறுக்கின்றது.
குறிப்பிட்ட வீடியோ காட்சியில் சுடப்படுபவர் சிங்களத்தில் பேசுகின்ற அதேவேளை துப்பாக்கிதாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் தமிழில் பேசுகிறார். இது போன்ற பல்வேறு குழப்பங்கள் அதில் அடங்கியுள்ளன. இந்தக் காட்சி பொய்யென நிரூபிக்கப்பட்டதன் பின்னர் அந் நிறுவனத்தின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.
""சனல் 4'' இன் முயற்சியானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முப்படைத் தளபதிகளும் யுத்தக் குற்றவாளிகள் என்று சித்தரிப்பதற்கானதாகும் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment