14 வயதில் கைதுசெய்யப்பட்டு 15 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் தமிழ் இளைஞன்
14 வயதில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் எவ்வித விசாரணைகளும் இன்றி கடந்த 15 வருடங்களாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அந்த இளைஞருக்கு 29 வயதாகிறது. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தகவல்களை சேகரித்த போது, குறித்த அமைப்புக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகள் எதுவுமின்றி பல தமிழ் இளைஞர்கள் வெலிகடை, களுத்துறை, பூசா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுதந்திரத்திற்கும் மற்றும் ஜனநாயகத்திற்குமான மக்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment